புதிய பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக், இந்தியாவில் டிசம்பரில் அறிமுகம்

Written By:

புதிய பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக், இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் வெளியாகிறது. எந்த நிறுவனமாக இருந்தாலும், சில மாடல்கள் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறாவிட்டால், அந்த மாடலை விலக்கி கொண்டும், பின்னர் அதே மாடல்களுக்கு மக்களிடம் இருந்து எதிர்பார்ப்புகள் எழும் நிலையில், அதே மாடல்களை மீண்டும் மறு அறிமுகம் செய்வதும் வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், தற்போது மறு அறிமுகம் செய்யப்படும் புதிய பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பல்சர் 200 என்எஸ்...

பல்சர் 200 என்எஸ்...

பல்சர் 200 என்எஸ், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்த முதல் புதிய தலைமுறை டூ வீலர் ஆகும். உள்நாட்டு சந்தைகளில் குறைந்து வந்த டிமான்ட் காரணமாக, இந்த பல்சர் 200 என்எஸ் மாடல், விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. தற்போது, பஜாஜ் ஆட்டோ நிறுவனம், உள்நாட்டு சந்தைகளிலும், வெளிநாட்டு சந்தைகளிலும், தாங்கள் விற்பனை செய்து வரும் மாடல்களை மறு சீரமைக்க முடிவு செய்துள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக்கை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மறு சீரமைத்து வருகிறது. இந்த புதிய பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக், இந்தியாவில் டிசம்பர் 2016-ல் அறிமுகம் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகிறது.

டெலிவரி;

டெலிவரி;

பஜாஜ் நிறுவனம், இந்த புதிய பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக்கின் டெலிவரியை, இந்தியா முழுவதும் புதிய-ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து துவங்க உள்ளது.

சமீபத்திய அறிமுகம்;

சமீபத்திய அறிமுகம்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், சமீபத்தில் தான் பல்சர் ஏஎஸ்200 மற்றும் ஏஎஸ்150 மோட்டார்சைக்கிள்களை விற்பனையை கூட்டும் நோக்கில் அறிமுகம் செய்தது. இதில் ஏஎஸ் மாடல்கள், பல்சர் 200 என்எஸ் மாடல்களை காட்டிலும் அதிக அளவில் விற்பனையானது. ஒரு விதத்தில், பல்சர் 200 என்எஸ் மாடல், ஏஎஸ் மாடல்களின் கூடுதல் விற்பனைக்கு வழி வகை செய்தது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக்கில், எந்த எந்த அம்சங்கள் மேம்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், புதிய பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக்கில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்த புதிய பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக்கில், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஏஹெச்ஓ எனப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆன் உள்ளிட்ட வசதிகளை கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து கேட்பு;

கருத்து கேட்பு;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்த பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக் தொடர்பாக, முன்னாள் உரிமையாளர்கள் மற்றும் டீலர்ஷிப்களிடம் இருந்து கருத்து கேட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இவர்களின் கருத்துகள், சிறிய சிறிய குறைகளை தீர்க்க உதவிகரமாக இருக்கும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நம்புகிறது.

கூடுதல் வண்ணங்கள்;

கூடுதல் வண்ணங்கள்;

புதிய பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக், புதிய நிறங்கள் மற்றும் ஈர்க்கும் வகையிலான டீகேல்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
2017 Bajaj Pulsar 200NS Model made by Bajaj Auto is likely to be launched by December. Bajaj Auto is planning on revamping its models. Pulsar 200NS was first new generation product to be introduced by Bajaj Auto. New Pulsar 200NS could be launched by December 2016. Bajaj would start deliveries during early 2017 pan India. To know more about 2017 Bajaj Pulsar 200NS, check here...
Story first published: Thursday, September 22, 2016, 13:47 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos