புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் பைக் விற்பனைக்கு அறிமுகம் - முழு விபரம்!

Written By:

தோற்றத்தில் சில மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதிய மாசு உமிழ்வு அம்சத்திற்கு உட்பட்டதாக எஞ்சின் மேம்படுத்தபடுத்தப்பட்டு வந்துள்ளது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் பைக் விற்பனைக்கு அறிமுகம்

டிசைனில் பெரிய அளவிலான மாறுதல்கள் எதுவும் செய்யப்படவில்லை. அதேநேரத்தில், மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட சைலென்சர், நீல வண்ண பேக்லிட் திரையுடன் கூடிய புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை சிறிய மாறுதல்களாக இருக்கின்றன.

புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் பைக் விற்பனைக்கு அறிமுகம்

மேலும், புதிய லேசர் வண்ணத்தில் வந்திருப்பதுடன், அதில் புதிய ஸ்டிக்கர் டிசைனும் பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கிற்கு கவர்ச்சி சேர்க்கிறது. மற்றபடி, பெரிய அளவில் எதுவும் இல்லை.

புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் பைக் விற்பனைக்கு அறிமுகம்

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இருசக்கர வாகனங்களுக்கு பிஎஸ்4 மாசு உமிழ்வு விதி அமலுக்கு வருகிறது. அதற்கு தக்கவாறு புதிய பஜாஜ் பலசர் 220எஃப் பைக்கின் எஞ்சின் பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிக்கு உட்படுத்தப்பட்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 20.76 பிஎச்பி பவரையும், 19.12 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த பைக்கில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

 புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கின் முன்புறத்தில் 260மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் கெர்ப் எடை 150 கிலோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் பைக் ரூ.92,201 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

English summary
Bajaj has launched the updated version of the Pulsar 220F which is now BS-IV compatible.
Story first published: Saturday, December 10, 2016, 9:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark