ஹோண்டா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 மடங்கு உயர்வு

By Ravichandran

இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப். நிறுவனமும், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா மோட்டார் கோ. நிறுவனமும், கூட்டாக சேர்ந்து ஹீரோ-ஹோண்டா என்ற பெயரில் இரு சக்கர வாகனங்களை தயாரித்து வந்தனர்.

இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே இருந்த கூட்டணி, உலக அளவில் ஆட்டோமொபைல் சந்தைகளில் மிகவும் வெற்றிகரமான கூட்டணியாக விளங்கியது.

5-years-post-split-Honda-sets-formidable-challenge-for-Hero

கூட்டணி முறிவு;

22 மார்ச் 2011-ஆம் தேடி அன்று, ஹீரோ நிறுவனம் மற்றும் ஹோண்டா நிறுவனம் இடையே இருந்த கூட்டணி முறைப்படி முறித்து கொள்ளபட்டது.

ஹோண்டா நிறுவனம், ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்த தங்களின் பங்குகளை விற்றுவிட்டனர்.

அப்போது முதல், 5 ஆண்டுகளுக்குள் ஹோண்டா மோட்டார் கோ. நிறுவனத்தின் இந்திய பிரிவு, தங்களின் சந்தை மதிப்பை 2 மடங்காக உயர்த்தி கொண்டுள்ளது.

ஹீரோ விடுக்கும் சவால்;

ஹீரோ நிறுவனமும் தங்களின் அவநம்பிக்கையாளர்களின் வாயை அடைப்பதில் வெற்றி கண்டுள்ளது.

சமீபத்தில் தான், ஹீரோ நிறுவனம், மிக உயர் தரத்திலான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தை துவக்கியுள்ளனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள இந்த மையம் 250 ஏக்கர் பரப்பளவில் கட்டபட்டுள்ளது. இது 850 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கியுள்ளனர்.

'சென்டர் ஆஃப் இன்னோவேஷன் அண்ட் டெக்னாலஜி' அல்லது சிஐடி என்று அழைக்கபடும் இந்த மையத்தில் 16 கிலோமீட்டர் அளவிலான, டெஸ்ட் டிராக்-கும் உள்ளது. இது இந்தியாவிலும், சர்வதேச அளவில் உள்ள சாலை நிலைமைகளை நிஜ உலகத்தில் உள்ளது போல் உருவகப்படுத்தும் வகையிலான வசதிகள் கொண்டுள்ளது.


ஹீரோ அமைத்த மாபெரும் கூட்டணிகள்;

ஹீரோ நிறுவனம், சர்வதேச அளவிலான தொழில்நுட்ப ஜாம்பவான்களான மேக்னெட்டி மரல்லி மற்றும் ஏவிஎல் ஜிஎம்பிஹெச் ஆகிய நிறுவனங்களுடன் கை கோர்த்துள்ளது. ஹீரோ நிறுவனம், சுமார் 30 அயல்நாட்டு வாகன சந்தைகளை கொண்டுள்ளது.

ஹீரோ நிறுவனத்தின் சேர்மேன் பவன் முஞ்ஜால், தங்கள் நிறுவனத்தின் சரிந்து வரும் விற்பனை குறித்து கவலை வெளிபடுத்தவில்லை. மாறாக, இத்தகைய ஏற்ற-இறக்கங்கள் எல்லாம் தற்காலிகமானது தான் என தெரிவித்தார்.

ஹீரோ-வின் வருங்கால திட்டம்;

ஜெய்ப்பூரில் உருவாக்கபட்டுள்ள 'சென்டர் ஆஃப் இன்னோவேஷன் அண்ட் டெக்னாலஜி' அல்லது சிஐடி மேற்கொள்ளப்பட உள்ள தொடர் ஆராய்ச்சிகள் மூலம், ஹீரோ நிறுவனம் பல்வேறு புதிய 100சிசி-110சிசி மோட்டார்சைக்கிள்களையும், புதிய ஸ்கூட்டர்களையும், பெரிய பைக்குகளையும் வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர்.

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் கண்டுள்ள அபார வெற்றி, ஹீரோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.

ஹோண்டா விற்பனை சரிவு;

2014 வரையில் இருந்த விற்பனையை காட்டிலும், 2014-2015-ஆம் ஆண்டில் ஹோண்டா நிறுவனத்தின் வாகனங்களின் விற்பனை 6.4% குறைந்தது. இதன வாகனங்களின் விற்பனை கடந்த 11 மாதங்களில் மேலும் 14.48% சரிந்துள்ளது.


ஹோண்டாவிற்கான சவால்;

ஹோண்டா நிறுவனம், முக்கியமாக கிராமப்புற பகுதிகளில், வெகுஜன மோட்டார்சைக்கிள் செக்மண்ட்டில் சில சிக்கல்களை எதிர்கொள்கிறது. இதற்கு முக்கிய காரணமே, இந்த செக்மெண்ட்டில் தாமதமாக பிரவேசம் செய்தது தான் என கூறப்படுகிறது.

இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மண்ட்டில், ஹோண்டா நிறுவனத்திற்கான முக்கிய சவாலாக விளங்குவதே ஹீரோ நிறுவனம் தான். ஹீரோ நிறுவனம், டூயட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் என்ற இரு ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

ஹீரோவின் வளர்ச்சி;

கடந்த சில மாதங்ககளில், ஹீரோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 13% முதல் 21% வரை உயர்ந்துள்ளது.

ஆனால், ஹோண்டா நிறுவனம் தங்களின் விற்பனையை கூட்ட ஆக்டிவா மாடலை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.

ஹோண்டாவின் விளக்கம்;

ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரிகள், தங்களின் விற்பனை சரியவில்லை என்றும், மாறாக அதிகமான தேவையை எதிர்கொள்வதில் தான் தங்களுக்கு சிக்கல் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.


சந்தை நிலவரம்;

போட்டியை சமாளிக்க ஹோண்டா நிறுவனமும் தங்களின் கட்டமைப்பை விரிவு படுத்தி கொண்டிருக்கின்றனர். தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனம் 4 உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. இவற்றின் மூலம் வருடத்திற்கு சுமார் 5.8 மில்லியன் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனால், அதே நேரத்தில் ஹீரோ நிறுவனம், ஒரு வருடத்தில் 8.1 மில்லியன் வாகனங்கள் உற்பத்தி செய்யும் வகையிலான திறன் கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 31, 2016, 19:32 [IST]
English summary
Hero MotoCorp from India and Indian two-wheeler unit of Honda Motor Co. formed partnership by the name Hero-Honda and was one of leading Automobile Giants in World. Now, it it 5 years, since they both split up on on 22 March 2011. Since then, Honda has doubled its market share. To know more about this De-merger, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X