அமீர் கான் பெற்று கொண்ட ஸ்பெஷலான பஜாஜ் வி மோட்டார்சைக்கிள்

By Ravichandran

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான், தனக்கென பிரத்யேகமான ஸ்பெஷல் எடிஷன் பஜாஜ் வி மோட்டார்சைக்கிளை பெற்று கொண்டார்.

அமீர் கான் பெற்று கொண்ட பஜாஜ் வி மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பெஷலான பஜாஜ் வி...

ஸ்பெஷலான பஜாஜ் வி...

சில நேரங்களில், சில பிரபலங்கள், குறிப்பிட்ட நிறுவனத்தின் வாகனங்களை, தங்களுக்கு என ஸ்பெஷலான மாற்றங்கள் செய்து, வாங்கும் வழக்கம் இருக்கிறது.

அப்படி தான், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானும், தனக்கு பிடித்த வகையில், சில மாற்றங்கள் செய்யபட்ட பஜாஜ் வி மோட்டார்சைக்கிளை வாங்கியுள்ளார்.

அமீர் கானுக்கு இந்த மோட்டார்சைக்கிளை, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டரான ராஜீவ் பஜாஜ் தனது கைப்பட ஒப்படைத்தார்.

ஒரே மாடல்...

ஒரே மாடல்...

அமீர் கான் பெற்று கொண்ட இந்த பஜாஜ் வி ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளுக்கு சில தனிப்பட்ட சிறப்புகள் உள்ளது.

இந்த பஜாஜ் வி மோட்டார்சைக்கிளின் ஃப்யூவல் டேங்க் பகுதியில் உள்ள ரெட் பகுதியில், அமீர் கானின் என குறிக்கும் வகையில், 'a' (அ) என்ற எழுத்தை பதித்துள்ளனர்.

மேலும், இந்த பஜாஜ் வி மோட்டார்சைக்கிளின் பின் பக்க சீட்டில் உள்ள கவுலில் உள்ள சோட்டேலால் ('Chotelal') என்ற சொல்லில் 3டி சின்னம் கொண்டுள்ளது.

இந்த சிறப்பு அம்சங்கள் அனைத்தும், அமீர் கானின் பஜாஜ் வி மோட்டார்சைக்கிளில் மட்டுமே இருக்கும். பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வேறு எந்த ஒரு பஜாஜ் வி மோட்டார்சைக்கிளிலும் இத்தகைய டிசைன் அம்சங்கள் இருக்காது என அறிவிக்கபட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

பஜாஜ் வி மோட்டார்சைக்கிள், இந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது.

டெலிவரி;

டெலிவரி;

இந்தியா முழுவதும் உள்ள பஜாஜ் வி மோட்டார்சைக்கிளின் வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி, சமீபத்தில் தான் துவங்கியது.

பெருமிதம்;

பெருமிதம்;

தங்கள் நிறுவனம் உருவாக்கியதிலேயே, பஜாஜ் வி மோட்டார்சைக்கிள் வாகனத்தினால் தான் மிகுந்த கர்வம் கொள்வதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவிக்கிறது.

சரித்திரம்;

சரித்திரம்;

அனைத்து பஜாஜ் வி மோட்டார்சைக்கிள்களும், அவற்றின் ஃப்யூவல் டேங்க்கில் சரித்திரம் கொண்டுள்ளது.

இவற்றின் டேங்க் மெட்டல், இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர் கப்பலின் மீதங்களில் இருந்து தயாரிக்கபட்டுள்ளது என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கூறியுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் தான் இந்தியாவிலேயே உருவாக்கபட்ட முழு முதல் போர்விமானம் தாங்கி கப்பல் என்பது குறிப்பிடதக்கது.

கப்பலின் மீதங்கள்;

கப்பலின் மீதங்கள்;

அனைத்து பஜாஜ் வி மோட்டார்சைக்கிள்களிலும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலின் ஸ்கிராப் மெட்டல் உபயோகிக்கபட்டுள்ளது.

இதற்காக, பஜாஜ் நிறுவனம், ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலின் 3 டன் ஸ்கிராப் மெட்டல் வாங்கியது. அனைத்து பஜாஜ் வி மோட்டார்சைக்கிள்களிலும், இந்த ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலின் கொஞ்ச சதவிகித மெட்டல் பிரயோகிக்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் வி மோட்டார்சைக்கிள், 149.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின் 11.80 பிஹெச்பியையும், 13 என் எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பஜாஜ் வி மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

விலை;

விலை;

பஜாஜ் வி மோட்டார்சைக்கிள், 66,614 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் விற்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

பஜாஜ் வி எக்சிக்யூடிவ் பைக் அறிமுகம்: முழுமையானத் தகவல்கள்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் விலை விபரம் வெளியிடபட்டுள்ளது - முழு தகவல்கள்

பஜாஜ் தொடர்புடைய செய்திகள்

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

பஜாஜ் ஆட்டோ தொடர்புடைய செய்திகள்

பஜாஜ் வி மோட்டார்சைக்கிள் ரூபத்தில் புதிய வடிவம் பெற்ற ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல்

பஜாஜ் வி பைக்கின் அதிகாரப்பூர்வ படங்களின் தொகுப்பு

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Thursday, May 5, 2016, 18:16 [IST]
English summary
Bollywood actor, Aamir Khan has accepted delivery of very unique special edition of Bajaj V motorcycle. Rajiv Bajaj, Managing Director of Bajaj Auto was present during the handover. Across the tank in red area, Bajaj has engraved letter 'a' for Aamir Khan. Rear seat cowl gets the word 'Chotelal' as 3D emblem. To know more about Aamir Khan Bajaj V, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+