அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் வெளியாகியது
பியாஜியோ நிறுவனம் வழங்கும் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.
பியாஜியோ குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, இங்கே பார்க்கவும்.

ஸ்பை படங்கள்;
இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான பியாஜியோ தான், இந்த பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர் ஸ்கூட்டரை தயாரித்து வழங்குகிறது.
அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், புனே அருகே சகன் என்ற இடத்தில் ஆராய் அமைப்பு அமைந்துள்ள பகுதிக்கு அருகே சோதனைகள் மேற்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

2-வது ஸ்கூட்டர்;
பியாஜியோ வழங்கும் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், முதன் முறையாக, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.
அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், பியாஜியோ நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் வழங்கும் 2-வது இரு சக்கர வாகனம் ஆகும்.
முன்னதாக, பியாஜியோ நிறுவனம், முதன் முதலாக எஸ்ஆர்வி 850 ஏபிஎஸ் (SRV 850 ABS) ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தி;
இந்த அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், மகாராஷ்டிராவில் பாராமதி என்ற இடத்தில் உள்ள இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படுகிறது.

சவாலான விலை;
அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்போர்ட்-ஸ்கூட்டர் பைக் தான், இந்த பியாஜியோ நிறுவனத்தின் பேட்ஜுடன் இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் தயாரிப்பு ஆகும்.
அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், இது மிகுந்த சவாலான விலையுடன் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஞ்ஜின்;
அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 150 சிசி, ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதே இஞ்ஜின் தான் வெஸ்பா ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் இஞ்ஜின், 7000 ஆர்பிஎம்களில் 11.4 பிஹெச்பியையும், 5500 ஆர்பிஎம்களில் 11.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

அறிமுகம்;
அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்திய வாகன சந்தைகளில் இந்த ஆண்டிலேயே வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை;
அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், சுமார் 80,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?
பியாஜியோவின் அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டருக்கு வெஸ்பா இஞ்ஜின்!
அப்ரிலியா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








