அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர் படங்கள் வெளியாகியது - இந்தியாவிற்கு வருமா?

By Ravichandran

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் இந்திவாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டரின் படங்கள் வெளியாகியது.

அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அப்ரிலியா எஸ்ஆர் 150...

அப்ரிலியா எஸ்ஆர் 150...

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் இரு சக்கர வாகனம் ஆகும்.

அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 என்ற ஸ்கூட்டரும், இதே அப்ரிலியா பிராண்டின் கீழ் தான் தயாரிக்கப்படுகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்திய வாகன சந்தைகளில் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு பின்னர் அறிமுகம் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகிறது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், பிளாக் மற்றும் வைத் ஆகிய நிறங்களில் வெளியாகும். ரெட் நிறத்தில் வெளியிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

புக்கிங்;

புக்கிங்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரை, வாடிக்கையாளர்கள் வெஸ்பா ஷோரூம்கள் சென்று புக்கிங் செய்து கொள்ளலாம்.

5,000 ரூபாய் என்ற புக்கிங் கட்டணம் செலுத்தி, இதை புக்கிங் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை;

விலை;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 78,000 ரூபாய் என்ற (ஆன்-ரோட்) விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

எஸ்ஆர் மோடார்ட் 125;

எஸ்ஆர் மோடார்ட் 125;

இந்த நிலையில், அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 என்ற ஸ்கூட்டரும், ஷோரூமில் காணபட்டது.

இதன் படங்கள், உங்களது டிரைவ்ஸ்பார்க் வாசகர் மூலம் எடுத்து அனுப்பபட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர், 124சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 8,500 ஆர்பிஎம்களில் 9.46 பிஹெச்பியையும், 7,500 ஆர்பிஎம்களில் 8.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

ஃபோர்க்குகள்;

ஃபோர்க்குகள்;

அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர், ஸ்டீல் டியூப் ஃபிரேம் கொணடுள்ளது.

இதன் முன் பக்கத்தில் டெலஸ்கோப்பிக் ஃபிரண்ட் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோ-ஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டரின் முன் பகுதியில் 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 140 மில்லிமீட்டர் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

வீல்கள்;

வீல்கள்;

அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டருக்கு, 14-இஞ்ச் அல்லாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

முக்கியமான வித்தியாசம்;

முக்கியமான வித்தியாசம்;

அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 மற்றும் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசமே, '125' ஸ்டிக்கரில் தான் உள்ளது.

சில தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டரில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை.

இந்தியாவிற்கு வருமா?

இந்தியாவிற்கு வருமா?

அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர், இந்தியாவிற்கு வருமா, இல்லையா என்பது குறித்து எந்த விதமான தெளிவான தகவல்களும் வெளியாகவில்லை.

எனினும், இந்த அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர், இந்தியாவில் சோதனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகிறது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

அப்ரிலியா எஸ்ஆர் மோடார்ட் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டு, அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரை போல் சரியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், தற்போது சந்தையில் முன்னோடியாக விளங்கும் ஹோண்டா போன்ற நிறுவனங்களுக்கு கடும் சவால் அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் ப்ரீ-புக்கிங் துவக்கம்

அப்ரிலியா தொடர்புடைய செய்திகள்

பியாஜியோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

Most Read Articles

Tamil
English summary
Italian bikemaker Aprilia is set to launch their SR 150 in India soon around post August 15. New SR 150 is available in black and white. Another colour (Red) is also on the cards. In between this, Aprilia SR Motard 125 was spotted at Dealership. Pictures of this Aprilia SR Motard 125 are also released. To know more about Aprilia SR 150 and SR Motard 125 Scooters, check here...
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more