பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் க்ரூஸர் பைக், புதிய வண்ணங்களில் அறிமுகம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் பைக், புதிய நிறங்களில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.
பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் பைக், க்ரூஸர் பைக் மாடலை சேர்ந்தது. இது குறைந்த விலை கொண்ட க்ரூஸர் பைக்காக உள்ளது. சமீப காலமாக இந்த பைக், பெரிய அளவிலான வேறுபாடுகள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் பைக், தற்போது சில மாறுதல்களுடன் மேம்படுத்தி வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்களிடையே பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் உள்ளன.
பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் பைக் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மேம்பாடுகள்;
பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் க்ரூஸர் பைக், 2 புதிய மற்றும் ஈர்க்கும் வகையிலான வண்ணங்களில் மேம்படுத்தபட்டு வழங்கப்படுகிறது.
ஆனால், பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 மற்றும் பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 ஆகிய 2 மாடல்களும் ஒவ்வொரு நிறத்தில் மட்டுமே மேம்படுத்தபட்டு வழங்கப்படுகிறது.

நோக்கம்;
பஜாஜ் ஆட்டோ நிறுவனம், தங்களின் பெரும்பாலான பைக்குகளை புதிய வண்ணங்களில் மேம்படுத்தி வழங்குகிறது. இத்தகைய மேம்பாடுகள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், விற்பனை அளவுகளை தொடர்ந்து தக்கவைத்து கொள்வதற்காகவும் செய்யப்படுகிறது.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150;
முன்னதாக, பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக், மிட்நைட் புளு நிறத்தில் மட்டுமே வழங்கபட்டது. தற்போது, பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக், புதிய காஸ்மிக் ரெட் பெயின்ட் ஸ்கீமிளும் அறிமுகம் செய்யப்படுகிறது.
காஸ்மிக் ரெட் லிவரி உடைய பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக், 75,500 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படுகிறது.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 220;
பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 பைக், அறிமுகம் செய்யப்படும் போது, மேட் பிளாக் வண்ணத்தில் மட்டுமே வழங்கபட்டது. தற்போது, வாடிக்கையாளர்கள் பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 பைக்கை, தேர்வு முறையிலான மேட் வைல்ட் கிரீன் பெயின்ட் ஸ்கீமில் அறிமுகம் செய்யப்படுகிறது.
மேட் வைல்ட் கிரீன் பெயின்ட் வண்ணத்திலான பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 பைக், 85,497 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படுகிறது.

முந்தைய மேம்பாடு;
முன்னதாக, மேம்பாடு என்ற பெயரில் பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 பைக், டெசர்ட் கோல்ட் பெயின்ட் ஸ்கீம் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதர மாற்றங்கள்;
நிறம் தொடர்பான மேம்பாடுகளை தவிர்த்து, பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக் மற்றும் பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 பைக்குகளில், மெக்கானிக்கல் ரீதியான மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;
மூன்று மாடல்களில் வருகிறது புதிய பஜாஜ் அவென்ஜர்!
பஜாஜ் அவென்ஜர் 220... க்ரூஸர் பைக் பிரியர்களுக்கான குட் சாய்ஸ்...!
அவென்ஜர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








