புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கில் இடம்பெற்றிருக்கும் அசத்தலான சிறப்பம்சங்கள்!

பஜாஜ் டோமினார் பைக்கில் இடம்பெற்று இருக்கும் பல முக்கிய சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

பல்சர் பிராண்டில் செயல்திறன் பைக்குகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனம், டோமினார் என்ற புதிய பிராண்டில் 400சிசி ரக பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

போட்டியாளர்களை விஞ்சும் பல சிறப்பம்சங்களுடன் மிக சவாலான விலையில் இந்த புதிய பைக் மாடல் மார்க்கெட்டில் குதித்துள்ளது. இந்த பைக்கில் இருக்கும் முக்கிய சிறப்பம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 புதிய ரகம்

புதிய ரகம்

க்ரூஸர் ஸ்போர்ட் என்ற புதிய ரகத்தில் இந்த பைக் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற க்ரூஸர் பைக் போல சொகுசானதாகவும், ஸ்போர்ட்ஸ் பைக்குகள் போன்ற சக்திவாய்ந்த எஞ்சினுடன் இந்த பைக் வந்துள்ளது

 எல்இடி ஹெட்லைட்

எல்இடி ஹெட்லைட்

இந்த புதிய பஜாஜ் டோமினார் பைக்கில் எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்பானதாக கூறலாம். இந்த எல்இடி ஹெட்லைட் ஒளி முன்னால் 1.5 கிலோமீட்டர் தூரம் வரை பிரகாசத்தை வழங்கும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவிக்கிறது.

 எல்சிடி க்ளஸ்ட்டர்

எல்சிடி க்ளஸ்ட்டர்

இந்த பைக்கில் எல்சிடி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரையின் மூலமாக எஞ்சின் சுழல் வேகத்தை காட்டும் டாக்கோமீட்டர், ஓடிய தூரத்தை காட்டும் ஓடோமீட்டர், வண்டியின் வேக அளவை காட்டும் ஸ்பீடோமீட்டர், எரிபொருள் அளவை காட்டும் ஃப்யூவல் கேஜ், கடிகாரம் மற்றும் ஏபிஎஸ் இண்டிகேட்டர் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

இந்த பைக்கில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. பைக்கை ஸ்டார்ட் செய்தது முதல் நிறுத்தும் வரை ஹெட்லைட் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். விரைவில் இந்த வசதி அனைத்து பைக்குகளிலும் கொடுப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்லிப்பர் க்ளட்ச்

ஸ்லிப்பர் க்ளட்ச்

வளைவுகளில் பைக்கின் வேகத்தை உடனடியாக குறைக்கும்போது அதற்கேற்ப கியர்களையும் குறைத்து பிரேக் பிடிக்கிறோம். அப்போது ஒவ்வொரு கியராக குறைக்காமல் நேரடியாக குறைவான கியருக்கு வருவதற்கு ஸ்லிப்பர் க்ளட்ச் உதவும். டவுன்ஷிஃப்ட் செய்யும்போது சக்கர சுழற்சியில் ஏற்படும் திடீர் தடை தவிர்க்கப்படும். சக்கரங்கள் வழுக்காமல் அதிக தரைப்பிடிப்பை கொண்டிருக்கும்.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

முன்புறத்தில் 320மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும் உள்ளது. இந்த பைக்கில் டியூவல் சேனல் ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம் இருப்பது சிறப்பான பாதுகாப்பு அம்சமாக கூறலாம். பிரேக் பிடிக்கும்போது வழுக்காமல் பைக் நிற்பதற்கு இந்த வசதி உதவும்.

பெரிமீட்டர் ஃப்ரேம்

பெரிமீட்டர் ஃப்ரேம்

வலிமையான முதன்மை சட்டத்தை கொண்ட ப்ரேமும், அதனுடன் வெல்டிங் செய்து இணைக்கப்பட்ட குழாய்கள் கட்டமைப்புடன் கூடிய துணை ஃப்ரேமும் மூன்று கோணத்தில் சென்று வண்டியின் கட்டமைப்புக்கு அடித்தளமிடுகின்றன. இந்த பெரிமீட்டர் ஃப்ரேம் கொண்ட பைக்குகள் சிறந்த நிலைத்தன்மை கொண்டதாகவும், அதிகபட்ச உறுதித் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

 சக்திவாய்ந்த பைக்

சக்திவாய்ந்த பைக்

கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 373.3சிசி எஞ்சின்தான் ட்ரிப்பிள் ஸ்பார்க் ப்ளக் கொண்டதாக இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 34.5 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இருப்பதால் சீரான பவர் டெலிவிரியும், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும். 0- 100 கிமீ வேகத்தை வேகத்தை 8.3 வினாடிகளில் இந்த பைக் எட்டிவிடும் வல்லமை கொண்டது.

டிசைன்

டிசைன்

அரக்கத்தனமான ஹெட்லைட் அமைப்பு, அகலமான டயர்கள், வலிமையான தோற்றத்தை தரும் பெட்ரோல் டேங்க், வித்தியாசப்படுத்தும் வண்ணத்தில் எஞ்சின் அமைப்புடன் மிரட்டுகிறது பஜாஜ் டோமினார் 400 பைக். பக்கவாட்டில் அலுமினியத்தாலான வலுவான சட்டமும் பைக்கிற்கு கம்பீரத்தை அதிகப்படுத்துகிறது. ஸ்பிளிட் இருக்கைகளும் இதன் சிறப்பு.

சவாலான விலை

சவாலான விலை

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாத மாடல் ரூ.1.37 லட்சத்திலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.1.51 லட்சத்திலும் சென்னையில் கிடைக்கின்றது. இது புதிய ரகம் என்று ஏற்கனவே சொன்னாலும், பட்ஜெட் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள், ஹோண்டா சிபிஆர் 250ஆர் மற்றும் மஹிந்திரா மோஜோ உள்ளிட்ட மாடல்களுடன் இணைத்து பார்க்கலாம். அப்படி பார்க்கையில் இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்பது மிக மதிப்பு வாய்ந்ததாக இருக்கிறது. எனவே, இளைஞர்களை வெகுவாக கவரும் என்று நம்பலாம்.

பெண் பணியாளர்கள்

பெண் பணியாளர்கள்

புனே நகரில் உள்ள பஜாஜ் ஆலையில் இந்த பைக் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முரட்டுத்தனமான பைக்கை உற்பத்தி செய்யும் பணியில் முழுக்க முழுக்க பெண் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெலிவிரி

டெலிவிரி

இந்த பைக்கிற்கு ரூ.9,000 முன்பணத்துடன் புக்கிங் செய்யப்படுகிறது. அடுத்த சில நாட்களில் முக்கிய நகரங்களில் உள்ள பஜாஜ் ஆட்டோ டீலர்ஷிப்புகளில் இந்த பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அடுத்த மாத துவக்கத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி வழங்கும் பணிகள் துவங்கும்.

Most Read Articles
English summary
Bajaj Dominar 400 Bike Highlights.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X