பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகியது
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரிக்கும் பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.
பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் தான், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரிக்கும் இரு சக்கர வாகனங்களில் அதிக டிஸ்பிலேஸ்மன்ட் கொண்ட வாகனமாக உள்ளது. இது, பஜாஜ் ஆர்வலர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பைக்குகளில் ஒன்றாக விளங்குகிறது.
பஜாஜ் தயாரிப்புகள், வழக்கமாக நல்ல மைலேஜ் திறனும் கொண்டிருக்கும்.
மக்களிடம் அதிக பரபரப்பு ஏற்படுத்திய மாடல்களில் ஒன்றான பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் மற்றும் தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் சிஎஸ்400 பைக்கின் சோதனைகள் மேற்கொள்ளபட்டு வந்தது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.
இதன் அறிமுகம் நெருங்கி கொண்டே இருக்கும் நிலையில், இந்த முறை மேற்கொள்ளபட்ட சோதனைகளின் போது, உருமறைப்பு செய்யப்படவில்லை.
மேலும், முக்கியமான பாதுகாப்பு அம்சமான ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் கேளிப்பர்களுக்கு செல்லும் சிங்கிள் ஹோஸ் மற்றும் பிரேக் மீது இருந்த சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் காணப்படவில்லை.

இஞ்ஜின்;
பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் அறிமுகம் செய்யப்படும் போது, கேடிஎம் டியூக் 390 பைக்கில் உள்ள அதே 373 சிசி லிக்விட் கூல்ட் இஞ்ஜின் பொறுத்தப்பட்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால், இதன் திறன், கேடிஎம் டியூக் 390 பைக்கில் உள்ளதை காட்டிலும் வெகுவாக குறைக்கபட்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கியர்பாக்ஸ்;
பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் இஞ்ஜின் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலமாக தான் ரியர் வீலுக்கு பவர் கடத்தப்படுகிறது.

பிரேக்;
பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் பைப்ர் (BYBRE) டிஸ்க் பிரேக்குகள் கொண்டுள்ளது.
மேலும், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் தேர்வு முறையில் பொருத்தப்படும்.

ஃபோர்க்;
பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், வழக்கமான ஃபிரண்ட் ஃபோர்க்கும், ரியர் மோனோ ஷாக் ஃபோர்க்கும் கொண்டுள்ளது.
இது கரடுமுரடான நிலப்பரப்பிலும் திறன்பட பயணிக்க உதவுகிறது.

டிசைன்;
முக்கியமான டிசைன் அம்சங்கள் என்ற அடிப்படையில், பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், எல்இடி ஹெட்லேம்ப்கள் கொண்டிருக்கும்.
கூடுதலாக, ஃப்யூவல் டேங்க் மீது செகண்டரி டிஸ்பிளே எனப்படும் இரண்டாம் நிலை டிஸ்பிளே உள்ளது.

அறிமுகம்;
பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், இந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதர தொடர்புடைய செய்திகள்;
பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய டாப் 5 தகவல்கள் - முழு விவரம்
பல்சர் தொடர்புடைய செய்திகள்
பஜாஜ் ஆட்டோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்
Spy Pictures Credit ; shifting-gears.com


Click it and Unblock the Notifications








