1,00,000 பஜாஜ் வி15 விற்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சாதனை

By Ravichandran

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 1,00,000 பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளை விற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் விற்பனை சாதனை தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

1,00,000 வி15 விற்பனை;

1,00,000 வி15 விற்பனை;

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தான், பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

தற்போது, இந்த வி15 மாடலில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 1,00,000 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், இந்த ஆண்டின் ஃபிப்ரவரி மாதத்தின் போது அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல், இந்த பஜாஜ் வி15 நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

அமோக வரவேற்பு;

அமோக வரவேற்பு;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், அறிமுகம் செய்யப்பட்ட முதல் வாரத்திலேயே சுமார் 20,000 புக்கிங் பதிவு செய்தது.

அறிமுகம் செய்யப்பட்ட முதல் 2 மாதங்களிலேயே, பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், இந்தியாவில் சிறந்த முறையில் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக மாறிவிட்டது.

ஐஎன்எஸ் விக்ராந்த் உடனான பந்தம்;

ஐஎன்எஸ் விக்ராந்த் உடனான பந்தம்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர் கப்பலின் மீதங்களில் இருந்து தயாரிக்கபட்டுள்ளது.

விமான தாங்கி போர் கப்பலாக விளங்கிய ஐஎன்எஸ் விக்ராந்த்-திற்கு மரியாதை செல்லுத்தும் விதமாகவே, அதன் மீதங்கள் கொண்டு, இந்த பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், தயாரிக்கபடுவதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் தான் இந்தியாவிலேயே உருவாக்கபட்ட முழு முதல் போர்விமானம் தாங்கி கப்பல் என்பது குறிப்பிடதக்கது.

விலை;

விலை;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், அபாரமான முறையில் விற்பனையாவதற்கு மற்றொரு முக்கிய காரணம், இதன் விலையாக தான் இருக்க முடியும்.

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், வெறும் 62,002 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் தான் விற்கப்படுகிறது.

150சிசி மோட்டார்சைக்கிளான பஜாஜ் வி15, இந்த விலையில் விற்கப்படுவதும், இதன் அமோக விற்பனைக்கு முக்கிய காரணியாக அமைந்துவிட்டது.

சிறப்பு அம்சங்கள் - 1;

சிறப்பு அம்சங்கள் - 1;

பஜாஜ் வி பைக் ஏராளமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

(*) டால் ஸ்டான்ஸ் (உயர்ந்த ஸ்டான்ஸ்)

(*) 13-லிட்டர் எரிபொருள் நிரப்பும் வகையிலான பெரிய ஃப்யூவல் டேங்க்

(*) மாஸ்குலைன் கிராஃபிக்ஸ்

(*) பிரஷ்ட் அலுமினியம் ஹைலைட்ஸ்

(*) கேஃப் ரேசர் (இன்ஸ்பையர்ட்) லுக்ஸ்

சிறப்பு அம்சங்கள் - 2;

சிறப்பு அம்சங்கள் - 2;

பஜாஜ் வி பைக் ஏராளமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

(*) 60 வாட்ஸ் ஹெட்லேம்ப் மற்றும் எல்ஈடி டெய்ல் லேம்ப்-கள்

(*) ட்வின் ஸ்போக் அல்லாய் வீல்கள்

(*) தண்ட்ரஸ் எக்ஹாஸ்ட்

(*) நிறம் மாறும் எல்ஈடி இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர்

சிங்கிள் சீட்டர்;

சிங்கிள் சீட்டர்;

அடிப்படையில், இந்த பஜாஜ் வி15, 2 பேர் அமரக்கூடிய வகையிலான மோட்டார்சைக்கிள் ஆகும்.

ஆனால், வாடிக்கையாளர்கள் விருப்பபட்டால் இதன் பாடி நிறத்திலான கௌல் கொண்டு ரியர் சீட்-டை மூடி மறைத்து விட்டால், சிங்கிள் சீட்டர் போல் காட்சி அளிக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், 149.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 11.8 பிஹெச்பியையும், 13 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வருங்கால திட்டங்கள்;

வருங்கால திட்டங்கள்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், அபாரமான வெற்றி அடைந்ததை அடுத்து, வி15 மோட்டார்சைக்கிள் அடிப்படையாக கொண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்வேறு புதிய மோட்டர்சைக்கிள்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த மோட்டர்சைக்கிள்கள், ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் விலை விபரம் வெளியிடபட்டுள்ளது - முழு தகவல்கள்

பஜாஜ் வி எக்சிக்யூடிவ் பைக் அறிமுகம்: முழுமையானத் தகவல்கள்

பஜாஜ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

More from DriveSpark

Article Published On: Tuesday, July 26, 2016, 11:30 [IST]
English summary
Bajaj's latest motorcycle, V15 has clocked 1,00,000 sales milestone in India. Bajaj V15 motorcycle was launched in India. V15 clocked 20,000 bookings in first week of its launch. Bajaj used the steel from the INS Vikrant, India's first aircraft carrier battleship to make parts of motorcycle. Based on success of V15, Bajaj plans to make more powerful versions of V15. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+