பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் சோதனைகளின் எடுக்கபட்ட படங்கள், வீடியோ வெளியாகியது

Written By:

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக் இந்திய சாலைகளில் சோதனை செய்யபடும் போது எடுக்கபட்ட படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வெளியாகியது.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர்...

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர்...

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

அப்போது முதல், இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வீடியோ வெளியீடு;

வீடியோ வெளியீடு;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், சாலைகளில் சோதிக்கபடும் போது எடுக்கபட்ட படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் காணப்படும் தயாரிப்பு நிலையிலான பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், ஸ்ட்ராடோ புளூ மெட்டாலிக் வண்ணத்தில் உள்ளது.

உற்பத்தி;

உற்பத்தி;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், டிவிஎஸ் மோட்டார்ஸ் - பிஎம்டபுள்யூ மோட்டோராட் நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சி மூலம் தமிழ்நாட்டின் ஓசூரில் அமைக்கபட்ட உற்பத்தி ஆலையில் தயாரிக்கபட உள்ளது.

ஏற்றுமதி;

ஏற்றுமதி;

இந்தியாவில் உற்பத்தி செய்யபடும் பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், ஐரோப்பா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கிற்கு, புதிதாக உருவாக்கபட்டுள்ள, 313 சிசி, சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 34 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 28 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் அறிமுகம் மற்றும் டெலிவரி குறித்து எந்த விதமான அதிகாரபூர்வ தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

போட்டி;

போட்டி;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், வகைபடுத்தபட்டுள்ள செக்மண்ட்டில் கடுமையான போட்டி காத்திருக்கிறது.

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், கேடிஎம் டியூக் 390 மற்றும் மஹிந்திரா மோஜோ ஆகிய பைக்குகளுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

பிஎம்டபுள்யூ ஜி 310 ஆர் பைக், சுமார் 3 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு குறைவான விலையில் அறிமுகம் செய்யபடலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபுள்யூ ஜி310ஆர் ஸ்ட்ரீட் பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது

பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஜி310ஆர், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

பிஎம்டபுள்யூ மோட்டோராட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
BMW Motorrad will soon be presenting BMW G 310 R bike. BMW G 310 R was seen testing on Indian Roads. Photos and Videos of BMW G 310 R Bike taken during its testing was released on Social Media. BMW G 310 R bike seen in Video is in Strato Blue Metallic colour. BMW G 310 R will be manufactured in Hosur, Tamilnadu. To know more, check here...
Story first published: Thursday, May 5, 2016, 11:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark