புதுடெல்லியில் பிஎஸ்-3 வரைமுறைகளுக்கு உட்பட்ட புதிய வாகனங்களின் பதிவு நடவடிக்கை நிறுத்தம்

Written By:

புதுடெல்லியில் பிஎஸ்-3 வரைமுறைகளுக்கு உட்பட்ட புதிய வாகனங்களின் பதிவு செய்யும் நடவடிக்கை நிறுத்தபட உள்ளது.

இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில், பிஎஸ்-3 வரைமுறைகளுக்கு உட்பட்ட இரு சக்கர வாகனங்களின் பதிவு செய்யும் நடவடிக்கை நிறுத்தபடுகிறது.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் என்ற இதழில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, அலுவல் ரீதியான உத்தரவு வழங்காமலேயே அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு, பிஎஸ்-3 வரைமுறைகளுக்கு உட்பட்ட புதிய வாகனங்களின் பதிவு நடவடிக்கையை மேற்கொள்கிறது.

பிஎஸ்-3 வரைமுறைகளுக்கு உட்பட்ட 2 சக்கர வாகனங்களை, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பிறகு இன்னும் கடுமையான பிஎஸ்-4 வரைமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளது.

delhi-government-stops-registration-new-bs-3-compatible-new-two-wheelers

ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பாக பிஎஸ்-3 வரைமுறைகளுக்கு உட்பட்டு பதிவு செய்யபடும் வாகனங்கள், ஏப்ரல் 1, 2017-ஆம் தேதிக்குள் பிஎஸ்-4 வரைமுறைகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

பஜாஜ் வி15, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், சுஸுகி ஆக்செஸ், ஹயாட்டே மோட்டார்சைக்கிள் ஆகிய புதிய வாகனங்கள் சமீபத்தில் பிஎஸ்-3 வரைமுறைகளுக்கு உட்பட்டே அறிமுகம் செய்யபட்டது.

கடந்த சில ஆண்டுகளாகவே, டெல்லியில் மாசு உமிழ்வு, அனுமதிக்கபட்ட அளவுகளின் வரம்பை மீறி அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது என்பது குறிப்பிடதக்கது.

English summary
Registration of New BS-III Compatible Two-Wheelers are stopped in Delhi. According to Business Standard, the Arvind Kejriwal led Delhi government has stopped registration of new BS-III models by manufacturers without an official order. New BS-III compatible bikes have to be registered before April 1, 2016. To know more about this new regulation, check here...
Story first published: Wednesday, March 16, 2016, 17:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark