டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் டிசம்பரில் அறிமுகம்
இந்திய-இத்தாலிய நிறுவனமான டிஎஸ்கே பெனெல்லி, முற்றிலுமாக புதிய தயாரிப்பை இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்ய உள்ளனர். முழுவதுமாக பொலிவு கூட்டப்பட்ட இதற்கு டொர்னேடோ 302ஆர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது..
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் டிசம்பரில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது. இந்திய வாகன சந்தை வேகமாக விஸ்தரித்து வருவதால், பல்வேறு அயல்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனம், தங்களின் தயாரிப்புகளை இந்தியாவிலும் அறிமுகம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், டிஎஸ்கே பெனெல்லி நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள டொர்னேடோ 302ஆர் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

டொர்னேடோ 302ஆர்...
இந்திய-இத்தாலிய நிறுவனமான டிஎஸ்கே பெனெல்லி, முற்றிலுமாக புதிய தயாரிப்பை இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்ய உள்ளனர். முழுவதுமாக பொலிவு கூட்டப்பட்ட இந்த மாடலுக்கு, டிஎஸ்கே பெனெல்லி நிறுவனம், டொர்னேடோ 302ஆர் மோட்டார்சைக்கிள் என பெயர் சூட்டியுள்ளனர்.

அறிமுகம்;
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302ஆர் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் டிசம்பர் 2016-ல் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இது பண்டிகை காலங்களின் போது அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. முன்னதாக, டிஎஸ்கே பெனெல்லி நிறுவனம், டொர்னேடோ 302ஆர் மோட்டார்சைக்கிளை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது.

இஞ்ஜின்;
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302ஆர் மோட்டார்சைக்கிளுக்கு 300 சிசி, ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இஞ்ஜின் தான் டிஎன்டி 300 மாடலிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த இஞ்ஜின், 35 பிஹெச்பியையும், 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302ஆர் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2016-ல் செய்யப்பட்ட அறிமுகங்கள்;
டிஎஸ்கே பெனெல்லி நிறுவனம், இதுவரை இந்த 2016-ஆம் ஆண்டில், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உடைய டிஎன்டி 600ஐ மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

வருங்கால அறிமுகங்கள்;
டிஎஸ்கே பெனெல்லி நிறுவனம், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உடைய டிஎன்டி 600ஜிடி மோட்டார்சைக்கிளை 2016-ஆம் ஆண்டு இறுதியிலும், டிஆர்கே 502 மோட்டார்சைக்கிளை 2017-ஆம் ஆண்டு துவக்கத்திலும் அறிமுகம் செய்ய உள்ளனர்.

போட்டி;
டிஎஸ்கே பெனெல்லி நிறுவனத்தின் டொர்னேடோ 302ஆர் மோட்டார்சைக்கிள், யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 மற்றும் கவாஸாகி நின்ஜா 300 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;
டிஎஸ்கே பெனெல்லி டொர்னேடோ 302ஆர் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் 3.5 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;
ஹைதராபாத் வந்த உலகின் மிகப்பெரிய விமானம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
உலகின் அதிவேகமான டாப் 10 கார்கள்: நம்பர் 1 இடத்தில் இருப்பது யார்?
ஸ்ட்ரீட் லைட்டுகளுக்கு குட்பை சொல்ல வருகிறது ஒளிரும் சிமென்ட் சாலை!


Click it and Unblock the Notifications








