டுகாட்டி மல்டிஸ்ட்ராடா பைக்கில் உலகை வலம் வர வாய்ப்பு - முழு விவரங்கள்

By Ravichandran

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா பைக்கில் உலகை வலம் வர உங்களுக்கு விருப்பமா?

இதோ உங்களுக்காக ஒரு அரிய வாய்ப்பை டுகாட்டி நிறுவனம் வழங்குகிறது. டுகாட்டி நிறுவனம் வழங்கும் இந்த அரிய வாய்ப்பு குறித்து வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

90 ஆண்டுகள்...

90 ஆண்டுகள்...

இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் டுகாட்டி நிறுவனம், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஒட்டுமொத்த கட்டுபாட்டின் கீழ் செயல்படும் நிறுவனம் ஆகும்.

டுகாட்டி நிறுவனம், 1926-ஆம் ஆண்டு 4-ஆம் தேதி, இத்தாலியில் உள்ள போலோகனா என்ற பகுதியில் உள்ள பனிகேல் என்ற இடத்தில் துவக்கபட்டது.

ஆட்ரியானோ கவாலியரி டுகாட்டி, ப்ரூனோ கவாலியரி டுகாட்டி, ஆண்டானியோ கவாலியரி டுகாட்டி மற்றும் மார்ஸெல்லோ கவாலியரி டுகாட்டி ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தை ஸ்தாபித்தனர்.

90-வது ஆண்டு கொண்டாட்டங்கள்;

90-வது ஆண்டு கொண்டாட்டங்கள்;

90-வது ஆண்டு விழாவை ஒட்டி, டுகாட்டி நிறுவனம் ஏராளமான கொண்டாட்டங்களுக்கு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஒலிம்பிக் பாணியிலான சுடர் அணிவகுப்பு தொடர் ஓட்டத்திற்கு (Olympic-style torch relay) ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

இந்த சுடர் அணிவகுப்பு தொடர் ஓட்டம் சுமார் 20,000 மைல் தூரத்திற்கு நடைபெறும்.

ரைடர்கள் தேர்வு;

ரைடர்கள் தேர்வு;

உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 20,000 மைல் தூரத்திற்கு மேற்கொள்ளப்பட உள்ள இந்த சுடர் அணிவகுப்பு தொடர் ஓட்டத்திற்காக 7 ரைடர்கள், தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.

ஸ்பெஷலாக வடிவமைக்கபட்ட இந்த சுடரை சுமந்து செல்லும் 7 அதிர்ஷ்டசாலி ரைடர்களுக்கான தேர்வு வரும் நாட்களில் நடைபெற உள்ளது. இந்த சுடர் ஆனது, டுகாட்டி நிறுவனத்தை வெற்றி பாதையை நோக்கி கொண்டு செல்லும், கட்டுக்கடங்கா உணர்ச்சியின் தீப்பிழம்பை ("Flames of Passion") குறிக்கிறது.

7 நிலைகள்;

7 நிலைகள்;

டுகாட்டு நிறுவனம் மேற்கொள்ள உள்ள சுடர் அணிவகுப்பு தொடர் ஓட்டம், 7 நிலைகளாக பிரிக்கபட்டுள்ளது.

7 நிலைகளுக்கும், 7 வெவ்வேறு ரைடர்கள் தேர்வு செய்யபட உள்ளனர். இந்த தொடர் ஓட்டத்திற்கான ரைடர்கள், புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 என்டியூரோ பைக்குகளை இயக்கி செல்வர்.

டுகாட்டியின் இந்த தொடர் ஓட்டம், ஜூலை 4-ஆம் தேதி துவங்கப்படும்.

பயண விவரங்கள்;

பயண விவரங்கள்;

டுகாட்டி நிறுவனம் நடத்தும் இந்த சுடர் அணிவகுப்பு தொடர் ஓட்டம், இத்தாலியின் பார்னோ பனிகேல் என்ற இடத்தில் அமைந்துள்ள டுகாட்டி உற்பத்தி ஆலையில் இருந்து ஜூலை 4-ஆம் தேதி துவங்கும். ஜூலை 4-ஆம் தேதி தான் இந்த டுகாட்டி நிறுவனம் துவக்கபட்டது என்பது குறிப்பிடதக்கது.

இத்தாலி துவங்கும் ரைடர்கள், ஐரோப்போ முழுவதும் பயணித்து, பின்னர் ரஷ்யாவின் ட்ரான்ஸ்-சைபீரியன் நெடுஞ்சாலை (ட்ரான்ஸ்-சைபீரியன் ஹைவே) செல்வர். அதன் பின், மங்கோலியா, சீனா ஆகிய நாடுகள் செல்ல உள்ளனர்.

அடுத்த கட்டமாக, ஜப்பான் செல்லும் இந்த ரைடர்கள் அங்கு சிறிய இடைவெளி எடுத்து கொண்டு, பின்னர் அமெரிக்கா சென்று, அதன் பின்னர் மீண்டும் ஐரோப்பா சென்று அடைவர் என தெரிவிக்கபட்டுள்ளது.

பயண நிறைவு;

பயண நிறைவு;

டுகாட்டு நிறுவனம் நடத்தும் இந்த சுடர் அணிவகுப்பு தொடர் ஓட்டம், டிசம்பர் 5-ஆம் தேதி முடிவு அடைகிறது.

இந்த சுடர் ஏந்தி செல்லும், 7 அதிர்ஷ்டசாலிகள், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள லட்சகணக்கான டுகாட்டி ரசிகர்களில் இருந்து தேர்வு செய்யபடுவர்.

பிற ஏற்பாடுகள்;

பிற ஏற்பாடுகள்;

பாரம்பரிய மீடியா மற்றும் சமூக வலைதளங்களில், தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பிலாக்கர்கள் மற்றும் பயணிகளுக்கான தேர்வை டுகாட்டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதர எதிர்பார்ப்புகள்;

இதர எதிர்பார்ப்புகள்;

டுகாட்டியின் இந்த சுடர் அணிவகுப்பு தொடர் ஓட்டத்தில் பங்கு கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், மோட்டார்சைக்கிள் நன்கு இயக்குபவர்களாகவும், பயணங்கள் மேற்கொள்ள மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் டுகாட்டி நிறுவனம் எதிர்பார்க்கிறது.

எல்லாவற்றையும் விட, இந்த ரைடர்கள், எழுத்து மற்றும் காட்சி ஊடகங்கள் மூலமாக தங்களின் பயண கதைகளை நன்கு வெளிபடுத்த தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என டுகாட்டி நிறுவனம் விரும்புகிறது.

தேர்வு நடவடிக்கை;

தேர்வு நடவடிக்கை;

முதலில், 14 ரைடர்கள் இறுதி பட்டியலின் முதற்கட்ட தேர்வுக்கு ஆராய படுவர். அதன் பின்னர், அதிலிருந்து இவர்கள் இறுதி பட்டியலின் இரண்டாம் கட்ட தேர்வுக்கு முன்னேற்றபடுவர். இந்த 2-ஆம் கட்ட தேர்வில், இந்த ரைடர்களின் ரைடிங் திறமைகளும் பரிசோதிக்கபடும்.

இந்த இறுதி பட்டியலின் 2-ஆம் கட்ட தேர்வுக்கு பின், டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 என்டியூரோ பைக்கில், டுகாட்டியின் சுடர் அணிவகுப்பு தொடர் ஓட்டத்தில் பங்கு கொள்ள இருக்கும் 7 இறுதியாளர்கள் தேர்ந்து எடுக்கபட உள்ளனர்.

பிற கொண்டாட்ட நடவடிக்கைகள்;

பிற கொண்டாட்ட நடவடிக்கைகள்;

90-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக டுகாட்டி நிறுவனம், தங்களின் அருங்காட்சியகத்தில் ஒரு பெரிய கண்காட்சி பகுதியை சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.

மிஸானோ வேர்ல்ட் சர்க்யூட் மார்கோ சிமோன்செல்லி-யில் விரிவாக்கம் செய்யபடும் இந்த அருங்காட்சியகம், வேர்ல்ட் டுகாட்டி வாரத்தின் போது (World Ducati Week (WDW) 2016) பொதுமக்கள் பார்க்க அனுமதி வழங்கபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அஜீத் கைககளுக்கு சவால் விட்ட டுகாட்டி டயாவெல் - ஒரு பார்வை

இந்தியாவில் மான்ஸ்ட்டர் 696 பைக்கை களமிறக்கும் டுகாட்டி

டுகாட்டி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Monday, April 25, 2016, 11:45 [IST]
English summary
Ducati is celebrating its 90th anniversary. As part of this, an Olympic-style torch relay, traveling nearly 20,000 miles around world is organized. 7 riders who would carry specially-designed torch will be selected in upcoming days. This Relay begins on July 4 from Ducati's factory in Borno Panigale, Italy and ends on December 5 back in Borno Panigale. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+