இந்தியாவில் டுகாட்டி நிறுவனத்தின் மேலும் 2 புதிய டீலர்ஷிப்கள் 2016-ல் திறக்கப்படும்
டுகாட்டி நிறுவனம், இந்தியாவில் மேலும் 2 புதிய டீலர்ஷிப்களை (ஷோரூம்) திறக்க திட்டமிட்டுள்ளனர். புதிய ஷோரூம்களை திறப்பது மிக முக்கியமான விஷயமாக, டுகாட்டி நிறுவனம் கருதுகிறது.
இத்தாலியை மையமாக கொண்டு டுகாட்டி நிறுவனம், விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வர்க்களை இந்தியா முழுவதும் விரிவுபடுத்துவதில் மும்முரமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2016-ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதற்குள், டுகாட்டி நிறுவனம், மேலும் 2 டீலர்ஷிப்களை நிறுவ உள்ளது.

தற்போதைய நிலையில், டுகாட்டி நிறுவனம், 3 பகுதிகளில் டுகாட்டி ஷோரூம்களை திறக்க ஆராய்ந்து வருகின்றனர். கொல்கத்தா, ஹைத்ராபாத் மற்றும் சென்னை ஆகிய 3 பகுதிகளில் இருந்து ஏதேனும் 2 மையங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு, சேல்ஸ் மற்றும் சர்வீஸ் மையங்கள் திறக்கப்பட உள்ளது.
தற்போதைய நிலையில், டுகாட்டி டீலர்ஷிப்கள், மும்பை, டெல்லி, குர்கான், பெங்களூரு மற்றும் பூனே ஆகிய நகரங்களில் மட்டுமே உள்ளது. இது வரை, இந்த மேற்குறிப்பிட்ட நகரங்களில் உள்ள டீலர்ஷிப்களில், இந்த பிரிமியம் பிராண்டிற்கு குறிப்பிடப்படும் படியான விற்பனை நடைபெற்று வருகிறது. விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களின் அதிகரிப்பு, இந்த பிரிமியம் பிராண்டின் விற்பனை கூட்டி வருகிறது.
சமீபத்தில் தான், டுகாட்டி நிறுவனம், புதிய 959 பனிகேல் பைக்கை இந்தியாவிழ்க் அறிமுகம் செய்தனர். டுகாட்டி பனிகேல், இந்தியாவில் 14.37 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் மும்பை விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. டுகாட்டி 959 பனிகேல் ஸ்போர்ட்ஸ் பைக்கின் டெலிவரி வெகு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








