டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்
டுகாட்டி நிறுவனம், தங்களின் புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளனர்.
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தேர்ந்து கொள்ளலாம்.

அறிமுகம்;
இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் டுகாட்டி நிறுவனம், புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் என்ற பெயரிலான ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளனர்.
இந்த ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள், பைக்ஸ் பீக் மலை ஏற்றம் நிகழ்ச்சியின் போது அறிமுகம் செய்யபட்டது.
இது, டுகாட்டி நிறுவனத்தின் 90-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யபட்டுள்ளது.

லிமிடெட் எடிஷன்;
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள், லிமிடெட் எடிஷன் மாடலாக அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த மாடலில் வெறும் 400 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே தயாரிக்கப்படும்.

இஞ்ஜின்;
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள், 1198.4 சிசி, எல்-ட்வின் சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இதன் இஞ்ஜின், 160 பிஹெச்பியையும், 136 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் இஞ்ஜினியர்கள், இதை டியூன் செய்துள்ளனர்.

கியர்பாக்ஸ்;
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், லைட் ஆக்ஷன் ஹைட்ராலிக் கிளட்ச் உடைய 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள், டுகாட்டி கார்ணரிங் லைட்கள், டுகாட்டி சேஃப்டி பேக்கு, டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல் கொண்டுள்ளது.
மேலும், இந்த மோட்டார்சைக்கிளில், க்ரூஸ் கண்ட்ரோல், ரைடிங் மோட், ஹாண்ட்ஸ்-ஃப்ரீ இக்னிஷன் மற்றும் பாஷ் 9ME மல்டி-கேளிபரேஷன் கார்னரிங் ஏபிஎஸ் (Bosch 9ME multi-calibration cornering ABS) ஆகியவற்றை டுகாட்டி இஞ்ஜினியர்கள் பொருத்தியுள்ளனர்.

சாதனை பதிவு;
கார்லின் டன் (Carlin Dunne) என்ற ரைடர் தான், அமெரிக்காவில் உள்ள பைக்ஸ் என்ற இந்த மலையினில் 9 நிமிடம் மற்றும் 53 நொடிகளில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
அவர், 2012-ல் மிக வேகமான பெட்ரோல் 2-வீலரான டுகாட்டி மல்டிஸ்ட்ராடா மோட்டார்சைக்கிளை பயன்படுத்தி இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இந்த டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் ஆன்னிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள், அமெரிக்காவில் உள்ள இந்த பைக்ஸ் மலை ஏற்றத்தின் 100-வது ஆண்டு விழாவை நினைவு கூறும் விதமாக அறிமுகம் செய்யப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
புதிய மல்டிஸ்ட்ராடா 1200 பைக்ஸ் பீக் எடிஷன், இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம்
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா பைக்கில் உலகை வலம் வர வாய்ப்பு - முழு விவரங்கள்
டுகாட்டி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








