டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 எண்ட்யூரோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்
டுகாட்டி நிறுவனத்தின் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 எண்ட்யூரோ மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் தயாரிக்கும் 2 வீலர்களுக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு உள்ளது.
டுகாட்டியின் மோட்டார்சைக்கிள்கள் ஸ்டைலாகவும், நல்ல செயல்திறனுடனும் உள்ளதால் மக்கள் இதை பெரிதும் விரும்புகின்றனர். டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 எண்ட்யூரோ மோட்டார்சைக்கிள், இந்திய வாகன சந்தைகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாகனங்களில் ஒன்றாக உள்ளது.
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 எண்ட்யூரோ மோட்டார்சைக்கிள், அட்வென்ச்சர் பைக் வகையை சேர்ந்ததாகும்.
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 எண்ட்யூரோ மோட்டார்சைக்கிள் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின்;
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 எண்ட்யூரோ மோட்டார்சைக்கிள், எல்-ட்வின் சிலிண்டர் உடைய 1,198.4 சிசி, லிக்விட்-கூல்ட், டெஸ்மோட்ரோமிக் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இந்த இஞ்ஜின், 160 பிஹெச்பியையும், 136 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 எண்ட்யூரோ மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மோட்கள்;
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 எண்ட்யூரோ மோட்டார்சைக்கிள், ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் எண்ட்யூரோ என 4 டிரைவிங் மோட்களில் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;
டுகாட்டி இஞ்ஜினியர்கள், டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 எண்ட்யூரோ மோட்டார்சைக்கிளுக்கு ஸ்கைஹூக் சஸ்பென்ஷன், டிராக்ஷன் கண்ட்ரோல், கார்ணரிங் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ரைட் பை வயர் சிஸ்டம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 எண்ட்யூரோ மோட்டார்சைக்கிள், எப்போது குதித்து லேண்ட் செய்கிறது என ஆராய்ந்து கொள்ள முடியும்.

இதர அம்சங்கள்;
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 எண்ட்யூரோ மோட்டார்சைக்கிளில் உள்ள ஆன்போர்ட் எலக்ட்ரானிக்ஸ், சஸ்பென்ஷன் ரீகாயில் மற்றும் ரீபவுண்ட் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
இதில் உள்ள வெஹிகிள் ஹோல்ட் கண்ட்ரோல் சிஸ்டம், அப்ஹில் ஸ்டார்ட்ஸ் எனப்படும் மலை ஏற்ற ஸ்டார்ட் நடவடிக்கைகளின் போது உதவுகிறது.
மேலும், டுகாட்டி நிறுவனம், இந்த அட்வென்ச்சர் பைக்கிற்கு, குரூஸ்-கண்ட்ரோல் மற்றும் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ இக்னிஷன் போன்ற வசதிகளையும் சேர்த்துள்ளது.

மல்டிமீடியா சிஸ்டம்;
இந்த மல்டிஸ்ட்ராடா 1200 எண்ட்யூரோ மோட்டார்சைக்கிளில் டுகாட்டி நிறுவனம், டுகாட்டி மல்டிமீடியா சிஸ்டம் பொருத்தியுள்ளனர்.
ரைடர்கள் புளுடூத் வழியாக தங்களின் ஸ்மார்ட்ஃபோன்களை இந்த மோட்டார்சைக்கிளுடன் இணைத்துக்கொள்ள இந்த டுகாட்டி மல்டிமீடியா சிஸ்டம் உதவிகரமாக உள்ளது.
மேலும், டுகாட்டி மல்டிமீடியா சிஸ்டம் மூலம் ரைடர்கள், மியூஸிக் கேட்கலாம், போன் பேசலாம், மெசேஜ் குறித்த நோட்டிஃபிகேஷன் பெறலாம், ரைடிங் டேட்டாவை ரெகார்ட் செய்யலாம், மேலும் இந்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

அறிமுகம்;
தற்போதைய நிலையில், இந்த டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 எண்ட்யூரோ மோட்டார்சைக்கிள், மும்பை, பூனே, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய விற்பனை மையங்ககளில் மட்டுமே கிடைக்கிறது.

விலை;
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 எண்ட்யூரோ மோட்டார்சைக்கிள், 17.44 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;
டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் அர்பன் எண்ட்யூரோ மாடல் இந்தியாவில் அறிமுகம் - விபரம்
மல்டிஸ்ட்ரேடா 1200 பைக்கிற்கு போட்டியாளர்களால் கசகசப்பு... ஜெனிவா மோட்டார் ஷோவையும் விடாத டுகாட்டி!
டுகாட்டி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








