ஐடர் சிஎஃப் மோட்டோ 650 என்கே மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்
ஐடர் சிஎஃப் மோட்டோ 650 என்கே மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.
ஐடர் மோட்டார்ஸ், ஹைதரபாத் நகரை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், சீனாவை மையமாக கொண்டு இயங்கும் சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் சார்பாக, இந்திய வாகன சந்தைகளில் 2 சக்கர வாகனங்களை விற்கிறது.
ஐடர் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் 650 என்கே மோட்டார்சைக்கிளை இந்திய வாகன சந்தைகளில் தற்போது அறிமுகம் செய்துள்ளனர். சிஎஃப் மோட்டோவின் 650 என்கே மோட்டார்சைக்கிள் தான், இந்தியாவிலேயே மிகவும் விலை குறைந்த சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் ஆகும்.
650 என்கே மோட்டார்சைக்கிள், 649.3 சிசி பேரலல் ட்வின், லிக்விட்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 60.34 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 62 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டி கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.
எரிபொருள் நிரப்ப படாத நிலையில், சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் 650 என்கே மோட்டார்சைக்கிள் 193 கிலோகிராம் எடை கொண்டுள்ளது. இதன் முன் பகுதியில் ட்வின் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில், சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் பொருத்தபட்டுள்ளது.
650 என்கே மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில், டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் சிஸ்டமும், பின் சக்கரத்திற்கு மோனோ ஷாக் சஸ்பென்ஷன் சிஸ்டமும் பொருத்தபட்டுள்ளது. 2 பகுதியிலும் க்யாபா நிறுவனத்தின் சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தபட்டுள்ளது.

தற்போதைய நிலையில், ஐடர் மோட்டார்ஸ் வழங்கும் 650 என்கே மோட்டார்சைக்கிள், பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய 2 வண்ணங்களின் தேர்வுகளில் மட்டுமே வழங்கபடும்.
இந்த ஐடர் மோட்டார்ஸ் இணையதளத்தில், இந்த 650 என்கே மோட்டார்சைக்கிள், ஏபிஎஸ் தேர்வுடனும் கிடைக்கும் என அறிவிக்கபட்டுள்ளது.
இதன் விலைகள் ஈர்க்கும் வகையில் நிர்ணயிக்கபட்டுள்ளது. எனினும், புகழ்பெறாத நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கும் முன், அதன் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் செண்டர்கள் குறித்து தெரிந்து கொள்ள விருப்பபடுவது என்பது சகஜமான விஷயமாகும்.
நேகட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் மோட்டார்சைக்கிளான ஐடர் சிஎஃப் மோட்டோ 650 என்கே மோட்டார்சைக்கிள், வரிகள் மற்றும் செக்கப் உட்பட 3.37 லட்சம் ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யபடுகிறது.


Click it and Unblock the Notifications








