ஆட்டோ எக்ஸ்போவை கலக்க காத்திருக்கும் டாப் -5 பைக் மாடல்கள்!

Written By:

அடுத்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச வாகன கண்காட்சி, ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது. கார் தயாரிப்பு, பைக் தயாரிப்பு துறையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளுடன் வாடிக்கையாளர்களை கவர காத்திருக்கின்றன.

இந்த நிலையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய பைக் மாடல்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

 01. டிவிஎஸ் அப்பாச்சி 200

01. டிவிஎஸ் அப்பாச்சி 200

தற்போது தீவிர சாலை சோதனைகளில் இருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் தயாரிப்பு நிலை மாடல், அடுத்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதல் தரிசனம் தர இருக்கிறது. டிரேக்கன் கான்செப்ட் அடிப்படையில் தயாரிப்பு நிலைக்கு மேம்பட்டிருக்கும் இந்த புதிய மாடல் கேடிஎம் மற்றும் பஜாஜ் பல்சர் ரகங்களுடன் போட்டி போடும்.

அப்பாச்சி 200 எஞ்சின்

அப்பாச்சி 200 எஞ்சின்

இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட புதிய 200சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் அப்பாச்சி ஆர்டிஆர்180 பைக்கின் எஞ்சினில் மாற்றங்கள் செய்து 200சிசி எஞ்சினாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனுடன் சேர்த்து புதிய டிவிஎஸ் விக்டர் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

02. பெனெல்லி டொர்னேடோ 302

02. பெனெல்லி டொர்னேடோ 302

பெனெல்லி பைக் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால், உற்சாகமடைந்திருக்கும் அந்த நிறுவனம் தொடர்ந்து புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது. அந்த விதத்தில், கடந்த ஆண்டு நவம்பரில் இத்தாலியில் நடந்த மோட்டார்சைக்கிள் திருவிழாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டொர்னேடோ 302 மாடலை இந்தியாவில் விரைவில் களமிறக்க திட்டமிட்டிருக்கிறது. தற்போது, இந்தியாவில் விற்பனையில் இருக்கும் டிஎன்டி 300 என்ற நேக்டு பாடி ஸ்டைல் கொண்ட மாடலின் முழுவதும் ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இது வருகிறது. இது 196 கிலோ எடை கொண்டது. டிசைன், கையாளுமை, செயல்திறன் என அனைத்திலும் சிறப்பாக இருக்கும் என்பதோடு, விலையிலும் வாடிக்கையாளர்களை கவரும்.

பெனெல்லி டொர்னேடோ 302 எஞ்சின்

பெனெல்லி டொர்னேடோ 302 எஞ்சின்

இந்த பைக்கில் 38 பிஎச்பி பவரையும், 26 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல இரட்டை சிலிண்டர்கள் கொண்ட 300சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கவாஸாகி நின்ஜா 300, கேடிஎம் ஆர்சி390 பைக்குகளுடன் போட்டி போடும். ரூ.3 லட்சத்திற்கு மேலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

 03. டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ ஜி310ஆர்

03. டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ ஜி310ஆர்

டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாகியிருக்கும் முதல் பைக் மாடல்தான் ஜி310ஆர். கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய பை்க மாடலும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தர காத்திருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 34 எச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக இருக்கும். இதுவும் ரூ.3 லட்சத்தையொட்டிய விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

04. யுஎம் ரெனிகேட்

04. யுஎம் ரெனிகேட்

ஹார்லி டேவிட்சன், இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனங்களை தொடர்ந்து, மூன்றாவதாக, இந்தியாவில் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் கால் பதிக்க உள்ளது. லோஹியா ஆட்டோவுடன் கைகோர்த்து களமிறங்குகிறது யுஎம்.அடுத்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் யுஎம் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் யுஎம் ரெனிகேட் க்ரூஸர் பைக் மாடல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வித்தியாசமான ஸ்டைல் கொண்ட பைக் மாடலை விரும்புவோர்க்கு மிகச்சிறந்ததாக இருக்கும்.

 யுஎம் ரெனிகேட் எஞ்சின்

யுஎம் ரெனிகேட் எஞ்சின்

யுஎம் ரெனிகேட் பிராண்டில் மூன்று மாடல்கள் விற்பனையில் உள்ளன. அதிலும், மூன்று எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இருந்தாலும், குறைவான விலையில் யுஎம் பிராண்டு மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

05. ஹீரோ எச்எக்ஸ் 250ஆர்

05. ஹீரோ எச்எக்ஸ் 250ஆர்

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்ய இருக்கும் முதல் ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடல் என்பதால், இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அமெரிக்காவின் எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட புதிய பைக் மாடல். அடுத்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த பைக்கை கண்ணார கண்டு ரசிக்கலாம்.

 ஹீரோ எச்எக்ஸ் 250ஆர் எஞ்சின்

ஹீரோ எச்எக்ஸ் 250ஆர் எஞ்சின்

இந்த பைக்கில் 31 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 249சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைந்து செயலாற்றும். அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரை தொடக்கூடிய வல்லமை கொண்ட மாடலாக இருக்கும்.

 
English summary
Here’s a list of 5 most awaited upcoming bikes that are likely to be showcased at the Auto Expo 2016
Story first published: Monday, January 4, 2016, 13:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark