16 வயது நிரம்பியவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ்... மத்திய அரசு திட்டம்...

By Meena

இந்தியாவில் வாக்குரிமை பெறுவதற்கான வயது 21-ஆக இருந்தது. இளைஞர்களின் அரசியல் அறிவாற்றல் வளர்ந்ததாலும், முடிவு எடுக்கும் திறன் மேம்பட்டதாலும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வாக்குரிமைக்கான வயதை 18-ஆகக் குறைத்தார். அது இப்போது வரை நடைமுறையில் உள்ளது. அதேபோல வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயதும் 18-ஆகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிவேகமாக மாறி வரும் உலகில், விநாடி முள்ளைக் காட்டிலும் வேகமாக இயங்கும் இளைஞர்கள், தனது 15-ஆவது வயதுகளிலேயே அனைத்து வாகனங்களையும் இயக்கும் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

டிரைவிங் லைசென்ஸ்

சாலைகளில் பதின் பருவ இளைஞர்கள் படு ஸ்டைலாக வண்டி ஓட்டிக் கொண்டு செல்வதை நம்மில் பலரும் கவனித்திருப்போம். அதையெல்லாம் கருத்தில் கொண்டு, 16 வயது நிரம்பியவர்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அது சில நிபந்தனைகளுடன்தான். அதாவது கியர் இல்லாத 100 சிசி திறனுக்குக் குறைவான ஸ்கூட்டர்களை மட்டும் ஓட்டுவதற்கான லைசென்ஸை அவர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, அது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால் 16 வயது பூர்த்தியானவர்களுக்கு லைசென்ஸ் வழங்கும் முறை அமல்படுத்தப்படும்.

அவ்வாறு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டாலும், அதிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை மட்டுமே 16 வயதுடையவர்கள் ஓட்ட அனுமதிக்கப்படுவர்.

தற்போது டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் மட்டுமே 100 சிசி திறனுக்கு குறைவான ரகத்தில் விற்பனையாகும் ஸ்கூட்டராக உள்ளது. ஒரு வேளை 16 வயது உடையோருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறை அமலானால் 100 சிசிக்கு குறைவான ஸ்கூட்டர்கள் பல மாடல்களில் புதிதாக மார்க்கெட்டுக்கு வர வாய்ப்புள்ளது.

அது தனி செக்மெண்டாகவே உருவாக வாய்ப்புள்ளது. இதற்கு நடுவே பெரும்பாலான வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியைப் பொருத்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

அனைத்து வாகனங்களுக்கும் அதிகபட்ச வேகம் 80 கிலோ மீட்டராக நிர்ணயிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Most Read Articles
English summary
Government Planning To Offer Scooter License For 16 Year Olds.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X