ஹீரோ மோட்டோகார்ப், எக்ஸ்டீரிம் 200எஸ் பைக்கை அறிமுகம் செய்ய திட்டம்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எக்ஸ்டீரிம் 200எஸ் என்ற நேக்கட் பைக்கை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.
ஹீரோ எக்ஸ்டீரிம் 200எஸ் நேக்கட் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹீரோ எக்ஸ்டீரிம் 200எஸ்...
ஹீரோ எக்ஸ்டீரிம் 200எஸ் பைக், இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உருவாக்கும் புதிய பைக் ஆகும்.
இது நேக்கட் பைக், வகையை சேர்ந்ததாகும். இது முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகம்;
ஹீரோ எக்ஸ்டீரிம் 200எஸ் பைக், 2018 ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

உயர் அதிகாரி கருத்து;
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன உயர் அதிகாரியான மேலோ ல மேஸ்ஸான் அவர்களிடம் அதிக கொள்ளளவு கொண்ட பைக்குகளின் அறிமுகம் குறித்த ஓவர் டிரைவ் வினா எழுப்பியது.
அப்போது, "ஸ்போர்ட் நேக்கட் செக்மென்ட்டில், சுமார் 200 சிசி கொள்ளளவு கொண்ட பைக் ஒன்று, வரும் 2018 ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக அறிமுகம் செய்யப்படும்" என மேலோ ல மேஸ்ஸான் தெரிவித்தார்.

இஞ்ஜின்;
ஆட்டோ எக்ஸ்போவில் காணப்பட்ட ஹீரோ எக்ஸ்டீரிம் 200எஸ் பைக், லிக்விட் கூல்ட், சிங்கிள் சிலிண்டர், 200 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது.
இந்த இஞ்ஜின், 8500 ஆர்பிஎம்களில் 18.5 பிஹெச்பியையும், 6000 ஆர்பிஎம்களில் 17.2 என்எம் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;
ஹீரோ எக்ஸ்டீரிம் 200எஸ் பைக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதர அம்சங்கள்;
ஹீரோ எக்ஸ்டீரிம் 200எஸ் பைக், ஃபிரண்ட் கவுலில் ஏர் வென்ட்கள், ஃப்யூவல் டேங்க் மற்றும் பெல்லி பேன் கொண்டுள்ளது.
இவை இந்த இஞ்ஜினை குளுமையாக வைத்திருக்க உதவுகிறது.

சஸ்பென்ஷன்;
ஹீரோ எக்ஸ்டீரிம் 200எஸ் பைக்கின் முன் பக்கத்தில் டெலஸ்கோப்பிக் ஃபிரண்ட் ஃபோர்க்குகளும், பின் பக்கத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.

பிரேக்;
ஹீரோ எக்ஸ்டீரிம் 200எஸ் பைக்கின், முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும், டிஸ்க் பிரேக்குகள் பொருத்தபட்டுள்ளது.

போட்டி;
ஹீரோ எக்ஸ்டீரிம் 200எஸ் பைக், இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் போது, பஜாஜ் பல்சர், கேடிஎம் டியூக் 200 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி ஆகிய பைக்குகளுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்
மழை நேரத்தில் பயணிப்பதற்கு ஏற்ற டாப் 4 பைக் மாடல்கள்!
ஹீரோ மோட்டோகார்ப் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








