ஹீரோ மோட்டோகார்ப்பின் சென்டர் ஆஃப் இன்னோவேஷன் அண்ட் டெக்னாலஜி ஜெய்ப்பூரில் துவக்கம்

By Ravichandran

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் 'சென்டர் ஆஃப் இன்னோவேஷன் அண்ட் டெக்னாலஜி' என்ற மையத்தை திறந்துள்ளனர்.

ஹெச்எம்சிஎல் அல்லது ஹீரோ மோட்டோகார்ப் லிமிட்டெட் தான் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளராக திகழ்கிறது.

இந்த ஹீரோ நிறுவனம், தற்போது ஜெய்ப்பூரில் 'சென்டர் ஆஃப் இன்னோவேஷன் அண்ட் டெக்னாலஜி' அல்லது சிஐடி என்று அழைக்கபடும் இந்த மையத்தை 850 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டில் நிறுவியுள்ளனர்.

hero-motocorp-unveiled-centre-of-innovation-and-technology-in-jaipur-in-rajasthan

இந்த சிஐடி மையம் தான், ஹீரோ ரிசர்ச் மற்றும் டெவெலப்மண்ட் டீமின் (ஹீரோ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி குழு) முக்கிய மையமாக விளங்கும். இங்கு மிக உயரிய தரத்திலான ஆய்வகம், டிசைன் ஸ்டூடியோ மற்றும் எராளமான வசதிகள் உள்ளது.

இந்த சிஐடி-யில் 16 கிலோமீட்டர் அளவிலான, டெஸ்ட் டிராக்-கும் உள்ளது. இது இந்தியாவிலும், சர்வதேச அளவில் உள்ள சாலை நிலைமைகளை நிஜ உலகத்தில் உள்ளது போல் உருவகப்படுத்தும் வகையிலான வசதிகள் கொண்டுள்ளது.

hero-motocorp-unveiled-centre-of-innovation-and-technology-in-jaipur-rajasthan

சிஐடி மையத்தை துவக்கி வைத்த டாக்டர் மார்கஸ் பிரான்ஸ்பெர்கர், மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார். "இந்த சிஐடி மையத்தை நிறுவிய இந்த முயற்சியானது, பெரிய மைல்கல் ஆகும். எங்களது ஆர் அண்ட் டி குழுவிற்கு புதிய மற்றும் முக்கிய மையமாக விளங்கும் இந்த சிஐடி, எங்களது தயாரிப்புகளை உலக தரத்திலான நிலைமைகளில் பரிசோதித்து, சர்வதேச தரத்திலான தயாரிப்புகளை வழங்க முடிகிறது" என டாக்டர் மார்கஸ் கூறினார்.

"இந்த சிஐடி மையத்தின் மூலம், புதிய வேலை பாணிகளை துவக்கியதோடு மட்டுமல்லாமல், எங்கள் தயாரிப்புகளை உலக தரத்திற்கு மேம்படுத்த முடியும். இந்த சிஐடி மையம், இஞ்ஜினியரிங் திறமைகளை மேம்படுத்த உதவும் வகையிலும் செயல்படும்" என டாக்டர் மார்கஸ் பிரான்ஸ்பெர்கர் தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 12, 2016, 10:06 [IST]
English summary
Hero MotoCorp unveiled 'Centre of Innovation And Technology' In Jaipur, Rajasthan. Hero MotoCorp Ltd. (HMCL) - world's largest two-wheeler manufacturer has unveiled the 'Centre of Innovation and Technology', which is built with an investment of Rs. 850 crores and will be new home of Hero's Research & Development team. CIT also has 16 kilometers of test-tracks within the campus.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+