ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், மும்பையில் விற்பனைக்கு அறிமுகம்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உற்பத்தி செய்யும் ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், மும்பையில் பிராந்திய அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110...
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110, இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கும் பைக் ஆகும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தான் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாகும்.
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது. இந்த ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கில் பல புதிய மற்றும் பிரத்யேக அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

உருவாக்கம்;
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஹீரோ நிறுவனத்தின் குளோபல் செண்டர் ஃபார் இன்னோவேஷன் அன்ட் டெக்னாலஜி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கிற்கு, 109.15 சிசி இஞ்ஜின் பொரருத்தப்பட்டுள்ளது.
இந்த இஞ்ஜின், 7500 ஆர்பிம்களில் 9.2 பிஹெச்பியையும், 5500 ஆர்பிம்களில் அதிகப்படியாக 9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையது.

கியர்பாக்ஸ்;
பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கின் இஞ்ஜின், 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், நல்ல மைலேஜ் வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஒரு மணி நேரத்திற்கு அதிகப்படியாக 87 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் உடையதாகும்.

டிசைன்;
டிசைன் பொருத்த வரை, தற்போது வெளியாகியுள்ள ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக் போலவே காட்சியளிக்கிறது.
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், புதிய கிராஃபிக்ஸ், மெல்லிய ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய கார்ட் ரெயில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இது குரோம் பூச்சு கொண்ட எக்ஸ்ஹாஸ்ட் கொண்டுள்ளது.
எனவே, பிரிமியம் மற்றும் தனித்தன்மையான தோற்றம் கொண்டுள்ள பைக், இதன் இலக்கு வாடிக்கையாளர்களான இளைதலைமுறையினரை வெகுவாக ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம்.

சிறப்பு அம்சங்கள்;
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கில், ட்ரிப் மீட்டர், ஃப்யூவல் லெவல் காண்பிக்கும் புதிய எல்சிடி டிஸ்பிளே மற்றும் ஓடோமீட்டர் சேர்க்கபட்டுள்ளது.

ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள்;
இதன் கிளாஸ்ஸில் முதல் முறையாக, ஏஹெச்ஓ எனப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் பொருத்தபட்டுள்ளது.
இந்த ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், சரியாக பார்க்க முடியாத இடங்களில், நன்கு பார்ப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது. இது வருங்காலங்களில் அனைத்து பைக்குகளிலும் ஸ்டாண்டர்ட் அம்சமாக அமைய உள்ளது.

வேரியன்ட்;
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்த ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கில் பல்வேறு வேரியன்ட்கள் அறிமுகம் செய்ய உள்ளனர்.

ஐடில் ஸ்டார்ட் / ஸ்டாப் சிஸ்டம்;
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கின் எரிபொருள் திறனை கூட்டுவதற்காக, புதிய ஐடில் ஸ்டார்ட் / ஸ்டாப் சிஸ்டம் i3S (Idle-stop-start system) சேர்கப்பட்டுள்ளது.
இந்த i3s டெக்னாலஜி (i3s technology) எனப்படும் தொழில்நுட்பம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தாலேயே உருவாக்கபட்டதாகும்.
இது, ஆங்காங்கே நிறுத்தி நிறுத்தி செல்ல வேண்டிய நகர்ப்புற போக்குவரத்துக்கு ஏற்றவாறு உள்ளது.

கிடைக்கும் நிறங்கள்;
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், சில்வர் மற்றும் பிளாக், ரெட் மற்றும் பிளாக், புளூ மற்றும் பிளாக், மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் ஆகிய 4 வெவ்வேறு டியூவல் டோன் வண்ணங்களில் கிடைக்கிறது.

நீண்ட பயணங்களுக்கு உகந்தது;
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், எர்கானமிக் டிசைன் கொண்டுள்ள காரணத்தால், கடுமையான நிலப்பரப்பிலும் இயக்க வசதியாக இருக்கும்.
மேலும், இது நீண்ட சீட் அமைப்பு கொண்டுள்ளதால், அதிக சொகுசு வழங்குகிறது.

அறிமுகம்;
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், இந்தியா அளவில் ஜூலை 14-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது, பிராந்திய அளவில் மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி மகாராஷ்டிரா முழுவதும் உள்ள அனைத்து ஹீரோ ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

போட்டி;
இந்திய வாகன சந்தைகளில் ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கிற்கு முக்கிய போட்டி வாகனங்களாக டிவிஎஸ் விக்டர், ஹோண்டா லிவோ, சுஸுகி ஹயாதே ஆகியவை விளங்குகின்றன.

விலை;
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், 55,672 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - முழு விவரம்
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக், ஜூலை 14-ல் இந்தியாவில் அறிமுகம்
பட்ஜெட் விலையில் டாப்-5 பைக்குகள் - முழு விவரம்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்
ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 - கூடுதல் படங்கள்


Click it and Unblock the Notifications








