மஹிந்திரா கஸ்ட்டோ 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125: சிறப்பம்சங்கள் ஒப்பீடு

By Saravana

எளிதான போக்குவரத்து சாதனமாக மாறியிருக்கும் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. தற்போது வாடிக்கையாளர்களிடத்தில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் 125சிசி செக்மென்ட்டில் புதிய ஸ்கூட்டர் மாடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், விரைவில் மார்க்கெட்டில் களமிறங்க இருக்கும் புதிய 125சிசி ஸ்கூட்டர் மாடல் மஹிந்திரா கஸ்ட்டோ 125. இந்தநிலையில், 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் வாடிக்கையாளர்களின் அபிமானம் பெற்ற ஹோண்டா ஆக்டிவா 125 மாடலுடன், மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

ஹோண்டா ஆக்டிவா 125: ரூ.63,000 டெல்லி ஆன்ரோடு விலையில் விற்கப்படுகிறது.

மஹிந்திரா கஸ்ட்டோ 125: ரூ.60,000 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன்: ஹோண்டா ஆக்டிவா 125

டிசைன்: ஹோண்டா ஆக்டிவா 125

ஹோண்டா ஆக்டிவா பிராண்டு டிசைன் வாடிக்கையாளர்களை கவர்ந்த ஒன்று. அந்த பெயரை ஹோண்டா ஆக்டிவா 125 மாடலும் தக்க வைத்து வருகிறது. மிக மிக கவர்ச்சிகரமான மாடல் என்று கூற முடியாவிட்டாலும் கச்சாமுச்சா என்று இல்லாத நாகரீகமான டிசைன்.

டிசைன்: மஹிந்திரா கஸ்ட்டோ 125

டிசைன்: மஹிந்திரா கஸ்ட்டோ 125

மஹிந்திரா கஸ்ட்டோ 125சிசி ஸ்கூட்டரின் வண்ணங்கள் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும் டிசைன் மிக ஸ்டைலான தோற்றத்தை வழங்குகிறது. இந்த விஷயத்தில் மஹிந்திரா கஸ்ட்டோ 125சிசி முன்னிலை பெறுகிறது.

எஞ்சின்: ஹோண்டா ஆக்டிவா 125

எஞ்சின்: ஹோண்டா ஆக்டிவா 125

ஹோண்டா ஆக்டிவா 125 சிசி ஸ்கூட்டரில் இருக்கும் 124சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 8.6 பிஎச்பி பவரையும், 10.1 என்எம் டார்க்கையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் கொண்டது.

 எஞ்சின்: மஹிந்திரா கஸ்ட்டோ 125

எஞ்சின்: மஹிந்திரா கஸ்ட்டோ 125

மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரில் 124.5சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 8.5பிஎச்பி பவரையும், 10 என்எம் டார்க்கையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் கொண்டது. அதிர்வுகள் குறைவான, நம்பகத்தன்மையான ஹோண்டா எஞ்சின்களை வீழ்த்துவது கடினம். இந்த விஷயத்தில் ஹோண்டா ஆக்டிவா 125 மாடலே முன்னிலை பெறுகிறது.

மைலேஜ்

மைலேஜ்

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் லிட்டருக்கு 59 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரின் மைலேஜ் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஹோண்டா ஆக்டிவா 125 மாடலுக்கு இணையான மைலேஜ் தரும் என நம்பலாம்.

சிறப்பம்சங்கள்: ஹோண்டா ஆக்டிவா 125

சிறப்பம்சங்கள்: ஹோண்டா ஆக்டிவா 125

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், ஆப்ஷனல் டிஸ்க் பிரேக்குகளும், முன்புறத்தில் 12 இன்ச் பின்புறத்தில் 10 இன்ச் அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஹோண்டா கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம்[CBS] நிரந்தர அம்சமாக இடம்பெற்று இருக்கிறது. ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டை வைக்கும் அளவிற்கு ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட் உள்ளது.

சிறப்பம்சங்கள்: மஹிந்திரா கஸ்ட்டோ 125

சிறப்பம்சங்கள்: மஹிந்திரா கஸ்ட்டோ 125

ஹோண்டா ஆக்டிவா 125 மாடலைப் போன்றே, மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரிலும் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், அலாய் வீல்கள், ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுக்கு கீழே சிறிய பொருட்களை வைப்பதற்கான பாக்கெட் ஒன்றும் உள்ளது. இதனை வேறுபடுத்துவது இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வசதியை கூறலா்.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரின் விலை இன்னும் வெளியிடப்படாத நிலையில், சிறப்பம்சங்கள், தோற்றம் ஆகியவற்றில் இரண்டும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் போராடுகின்றன. அதேநேரத்தில், டிசைன், தரமாமான பாகங்கள், சிறந்த செயல்திறன் கொண்ட எஞ்சின், சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் பிராண்டு மதிப்பு போன்ற விஷயங்களில் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரே முன்னிலை பெறுகிறது. கவர்ச்சிகரமான விலையில் வந்தால் மட்டுமே, மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டருக்கு வரவேற்பு கிடைக்கும்.

டெஸ்ட் டிரைவ் ஒப்பீடு

டெஸ்ட் டிரைவ் ஒப்பீடு

மஹிந்திரா கஸ்ட்டோ 110 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டர் மாடல்களை டெஸ்ட் டிரைவ் செய்து வழங்கப்பட்ட எமது டெஸ்ட் டிரைவ் ஒப்பீட்டு செய்தியை படிக்க க்ளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 13, 2016, 17:13 [IST]
English summary
One best selling scooter in India in this category is the Honda Activa 125. Now, Mahindra has a competitor for Honda, in the form of the new Gusto 125, which will soon be launched in India. So how do the Activa 125 and Gusto 125 compare in terms of pricing, design, engine specification, and features? Let's find out.
மேலும்... #review #bike review
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+