ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பைக், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பைக், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ள, ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக்கின் டீலக்ஸ் வேரியண்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடடில் காணலாம்.

ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பற்றி...

ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பற்றி...

ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் என்ற புதிய பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

நடுத்தர விலையில் கிடைக்கும் பைக்குகளில், ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கானது மிகவும் எதிர்பார்க்கபடும் இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

செல்ஃப் ஸ்டார்ட்;

செல்ஃப் ஸ்டார்ட்;

சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கிற்கு, ஹோண்டா நிறுவனம் செல்ஃப் ஸ்டார்ட் வசதியினை வழங்கியுள்ளனர்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ், 110 சிசி, ஏர்-கூல்ட், சிங்கிள்-சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 8.25 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் இஞ்ஜின், 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பைக், ஒரு லிட்டருக்கு 74 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கிறது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பைக், விரிவான வீல் பேஸ், அதிக வசதிக்காக நீண்ட சீட், ட்யூப்லெஸ் டயர்கள் (ட்யூப்கள் இல்லாத டயர்கள்), பராமரிப்பு தேவைப்படாத பேட்டரி ஆகிய வசதிகள் கொண்டுள்ளது.

இந்த பைக், 179 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பைக், கிட்டதட்ட ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக் போலவே உள்ளது என்று கூறலாம்.

ஆனால், ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பைக், எலக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் புதிய கிராஃபிக்ஸ் கொண்டுள்ளது.

புக்கிங்;

புக்கிங்;

ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், புக்கிங் செய்து கொள்ள தங்களுக்கு அருகாமையில் உள்ள ஹோண்டா ஷோரூம்களை அனுகலாம்.

விலை;

விலை;

ஜப்பானிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, இந்த சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கை 46,197 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்துள்ளனர்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக்கின் சிறப்பு பார்வை!

சிறப்பான மைலேஜ் தரும் 8 பட்ஜெட் பைக்குகள்!

ஹோண்டாவின் மில்லியன் கனவை நனவாக்கிய ட்ரீம் மோட்டார்சைக்கிள்கள்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Saturday, March 12, 2016, 14:26 [IST]
English summary
Honda has launched their Honda CD 110 Dream 'Deluxe' bike in India. This Bike has many features like self start, extended wheelbase, longer seat for more comfort, tubeless tyres, maintenance free battery etc. Bookings for these Bike can be done at the nearest dealerships. Honda CD 110 Dream 'Deluxe' bike is priced at Rs. 46,197/- ex-showroom (Delhi). To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+