ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி பைக், புதிய வண்ணத்தில் அறிமுகம்

By Ravichandran

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அன்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் வழங்கும் ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி பைக், புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

அவ்வப்போது, பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளுக்கு தொழில்நுட்ப மேம்பாடுகள், வண்ணம் தொடர்பான மேம்பாடுகள் செய்து புதிய வடிவில் அறிமுகம் செய்கின்றனர்.

அந்த வகையில் ஹோண்டா நிறுவனம், தங்களுடைய ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி பைக்கை, அறிமுகம் செய்துள்ளனர்.

ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி பைக் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய வண்ணம்...

புதிய வண்ணம்...

ஹோண்டா நிறுவனம் வழங்கும் ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி பைக், அத்லெட்டிக் புளூ மெட்டாலிக் (Athletic Blue Metallic dual tone paint scheme) மற்றும் பிளாக் கொண்ட டியூவல் டோன் பெயின்ட் ஸ்கீமில் கிடைக்கிறது.

அதிசயக்கத்தக்க வகையில், இந்த புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்யபட்டுள்ள பைக்கிற்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.

இதர நிறங்கள்;

இதர நிறங்கள்;

தற்போது அறிமுகம் செய்யப்பட்ட நிறத்தை தவிர, ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி பைக், பிளாக் உடைய ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், பிளாக் உடைய ஹெவி கிரே மெட்டாலிக், பியர்ல் அமேசிங் வைட், ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் பிளாக் ஆகிய 5 நிறங்களில் கிடித்து வருகிறது.

கடைசியாக, இந்த அத்லெட்டிக் புளூ மெட்டாலிக் மற்றும் பிளாக் கொண்ட டியூவல் டோன் பெயின்ட் ஸ்கீமிலும் கிடைக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி பைக், அதே சிங்கிள் சிலிண்டர் உடைய 109.19 சிசி, ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 8.25 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 8.63 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி பைக்கின் இஞ்ஜின், 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வேகம்;

அதிகபட்ச வேகம்;

ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி பைக், அதிகப்படியாக 86 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி பைக், ஒரு லிட்டருக்கு, 84 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் உடையதாகும்.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி பைக், டியூப்லஸ் டயர்கள், விஸ்கஸ் ஏர் ஃபில்டர், பராமரிப்பு தேவைப்படாத பேட்டரி கொண்டுள்ளதால், இவை இந்த பைக்கின் நீண்ட கால பிரயோகத்திற்கு உதவிகரமாக உள்ளது.

ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி பைக், சீரான சாலைகளிலும், கடுமையான நிலப்பரப்புகளிலும் உபயோகிக்க எதுவாக உள்ளது.

இது மெல்லிய எடை கொண்ட திடமான ஃபிரேம், நீண்ட சஸ்பென்ஷன் ஸ்டிரோக் மற்றும் வசதியான வாகன இயக்கம் அமைப்பு கொண்டுள்ளது.

இலக்கு வாடிக்கையாளர்கள்;

இலக்கு வாடிக்கையாளர்கள்;

ஸ்டைல் மற்றும் பெர்சனாலிட்டி எதிர்பார்க்கும் கம்யூட்டர் பைக் வாடிக்கையாளர்கள் தான், ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி பைக்கின் முக்கியமான இலக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

போட்டி;

போட்டி;

ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி பைக், யமஹா சல்யூட்டோ, சுஸுகி ஹயாத்தே, ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் மற்றும் டிவிஎஸ் ஃபீனிக்ஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது.

விலை;

விலை;

ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி பைக், 51,499 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஈர்க்கும் விலையில் விற்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அதே விலை, கூடுதல் அம்சங்களுடன் ஹோண்டா ட்ரீம் யுகா!

கூடுதல் மைலேஜ் தொழில்நுட்பத்துடன் வந்த ஹோண்டா ட்ரீம் யுகா

ட்ரீம் யுகா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Tuesday, August 16, 2016, 18:44 [IST]
English summary
Honda Motorcycle and Scooter India has launched their Dream Yuga in an all-new Black with Athletic Blue Metallic dual tone paint scheme. Dream Yuga is offered in Black with Radiant Red Metallic, Black with Heavy Grey Metallic, Pearl Amazing White, Sports Red, and Black. It returns fuel efficiency figures of 84km/l. To know more about this, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+