ஹோண்டா நிறுவனம் சர்வதேச மகளிர் தினத்தை விமர்சையாக கொண்டாடியது

By Ravichandran

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ஆம் தேதியான நேற்று உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடபட்டது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனமும், தங்கள் தரப்பில் இந்த சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களை மேற்கொண்டது.

பெண்மையை போற்றும் விதமாக, இந்தியா முழுவதும் உள்ள ஹோண்டா டிராஃபிக் பூங்காக்களில் கொண்டாடபட்டது. ஹோண்டா டிராஃபிக் பூங்காக்களுக்கு வருகை தந்த அனைத்து பெண்களுக்கு நாள் முழுவதும் கொண்டாட்டங்கள் நடத்தபட்டது.

honda-india-celebrated-international-womens-day-grand-manner-01

தற்போதைய நிலையில், சண்டிகர், ஜெய்பூர், புவனேஷ்வர், கட்டக், நாசிக் மற்றும் டெல்லியில் 2 பூங்காக்கள் உட்பட மொத்தம் 8 ஹோண்டா பூங்காக்கள் உள்ளது. இந்த 8 பூங்காக்களிலும், பெண்மையை போற்றும் விதத்தில் பல்வேறு கொண்டாட்டங்கள் நிகழ்த்தபட்டது.

விரைவில், மேலும் பல ஹோண்டா டிராஃபிக் பூங்காக்கள் விரையில் நிறுவப்பட உள்ளது.

இந்தியா முழுவதும் பரவியுள்ள 8 ஹோண்டா டிராஃபிக் பூங்காக்களில் 1,200 பெண் வாகன ஓட்டிகள் கௌரவிக்கபட்டனர். குர்கான் மற்றும் குஜராத்தில் உள்ள டிரெய்னிங்-கம்-லைவ்லிஹுட் செண்டர்களில் (பயற்சி-மற்றும்-வாழ்வாதார மையங்கள்) மகளிர் மேம்பாடுக்கான பயிற்சிகளை ஹோண்டா நிறுவனம் வழங்கிவருகிறது.

honda-india-celebrated-international-womens-day-grand-manner-02

இவ்வாறாக, 450 பெண்கள் தங்களின் தொழில் திறன்களை வளர்த்து கொண்டுள்ளனர்.

மேலும், செயல்முறை மற்றும் நடைமுறை மற்றும் கோட்பாடுகள் முறையிலான அறிவு சார்ந்த 2 மாதக்கால பயிற்சிகள் வழங்கபடுகிறது. இந்த 2 மாத பயிற்டிகளை
முடிப்பவர்களுக்கு நேஷனல் ஸ்கில்ஸ் டெவளப்மண்ட் கவுன்சில் (தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில்) மூலம் சான்றிதழ் வழங்கபடுகிறது.

ஹோண்டா நிறுவனம் பயிற்சி வழங்கும் இந்த மையங்களில் அனைவருமே பெண் ஊழியர்கள் தான் என்பதும், இந்த பெண் ஊழியர்களை கொண்டு தான் இங்கு
பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கபடுகிறது என்பதும் குறிப்பிடதக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 9, 2016, 15:39 [IST]
English summary
Honda Motorcycle and Scooter India firm celebrated the International Women's Day all across India on March 8th, 2016. Spirit of womanhood was celebrated across all the Honda Traffic Parks across the country. Day-long festivities were organised for the women present at these 8 Traffic Parks, which are situated in Chandigarh, Jaipur, Bhubaneswar, Cuttack, Nashik, Hyderabad and two parks in Delhi.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+