ஆக்டிவா ஸ்கூட்டர் தயாரிக்க ஹோண்டாவின் புதிய அசெம்பிளி லைன் துவக்கம்
ஹோண்டா மோட்டார்சைக்கிள் அன்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் 2-வது அசெம்பிளி லைன் துவக்கபட்டுள்ளது.
ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், குஜராத்தில் விதலாப்பூர் என்ற இடத்தில் உற்பத்தி ஆலை கொண்டுள்ளது. இந்த உற்பத்தி ஆலையின் 2-வது அசெம்பிளி லைனில், ஸ்கூட்டர் மட்டுமே தயாரிக்கப்படும். இந்த ஆலை தற்போது அதன் 100% உற்பத்தி திறனுடன் செயல்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கு, 0.6 மில்லியன் வாகனங்கள் தயாரிக்கப்படும் இந்த ஆலையில், 1.2 மில்லியன் வாகனங்கள் என்ற அளவிற்கு உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா நிறுவனத்திற்கு சொந்தமான விதலாப்பூர் உற்பத்தி ஆலையின் 2-வது அசெம்பிளி லைன், முழுக்க முழுக்க ஸ்கூட்டர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும். இங்கு, ஹோண்டா நிருவனத்தின் மிகவும் புகழ்பெற்ற மாடலான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படும். தற்போதைய நிலையில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தான், இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் 2 சக்கர வாகனமாக உள்ளது.
ஹோண்டா நிறுவனம், ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்க, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 4 உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. இந்த அனைத்து உற்பத்தி ஆலைகளையும் சேர்த்து, ஹோண்டா நிறுவனத்தின் வருடாந்திர உற்பத்தி திறன் 5.8 மில்லியன் யூனிட்கள் என்ற அளவில் உள்ளது.
தற்போதைய நிலையில், ஹோண்டாவின் ஹரியானாவில் உள்ள உற்பத்தி ஆலையில் 1.6 மில்லியன் யூனிட்களும், ராஜஸ்தானில் உள்ள உற்பத்தி ஆலையில் 1.2 மில்லியன் யூனிட்களும், கர்நாடகாவில் உள்ள உற்பத்தி ஆலையில் 1.8 மில்லியன் யூனிட்களும், குஜராத்தில் உள்ள உற்பத்தி ஆலையில் 1.2 மில்லியன் யூனிட்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறாக, கூட்டப்பட்ட உற்பத்தி மூலம், ஹோண்டா நிறுவனம் தங்கள் தயாரிப்புகளின் காத்திருப்பு காலத்தை வெகுவாக குறைத்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் இந்த நிதி ஆண்டிற்குள் 3.3 மில்லியன் யூனிட்கள் என்ற விற்பனை இலக்கை எட்ட எண்ணம் கொண்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு உற்பத்தியை துரிதப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு இயன்ற வரை வேகமாக வாகனங்களை டெலிவரி செய்தால் தான் இது சாத்தியமாகும்.


Click it and Unblock the Notifications








