ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அன்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் வழங்கும் மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டர், விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹோண்டா மெட்ரோபொலிட்டன்...

ஹோண்டா மெட்ரோபொலிட்டன்...

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டர் என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகக்ம் செய்ய உள்ளனர்.

இதற்காக, இந்நிறுவனம் பேடன்ட் எனப்படும் காப்புரிமையையும் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இவ்வாறாக, இந்தியாவில் ஹோண்டா ஸ்கூட்டர் ரேஞ்ச் மேலும் விரிவடைகிறது.

தோற்றம்;

தோற்றம்;

ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டர், ரெட்ரோ ஸ்டைல் எனப்படும் பழமையான தோற்றம் கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

சர்வதேச சந்தைகளுக்கான ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டருக்கு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் 50சிசி இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

எனினும் இந்தியாவிற்கான ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டரில், அதிமான நம்பகத்தன்மை வாய்ந்த ஆக்டிவா இஞ்ஜின் தான் பொருத்தப்படும்.

இந்தியாவிற்கான இஞ்ஜின்;

இந்தியாவிற்கான இஞ்ஜின்;

ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டருக்கு, ஆக்டிவா ஸ்கூட்டரில் உள்ள 109.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 8 பிஹெச்பியையும், 8.83 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டருக்கான ஆக்டிவா ஸ்கூட்டரின் இஞ்ஜின், வி-மேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டர், உச்சபட்சமாக மணிக்கு 82 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.

வகைப்படுத்தல்;

வகைப்படுத்தல்;

ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டர், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு கீழாக வகைப்படுத்தப்படும்.

டிசைன்;

டிசைன்;

ரெட்ரோ தோற்றம் கொண்ட ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டர், துவக்கத்தில் இருந்து முழுவதுமாக புதியதாய் வடிவமைக்கப்படுகிறது.

ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டர், இந்தியாவில் விற்பனையில் உள்ள ஆக்டிவா ரேஞ்ச் ஸ்கூட்டர்களின் தோற்றங்களுடன் எந்த விதமான ஒற்றுமைகளும் கொண்டிருக்காது என அறிவிக்கபட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டர், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, யமஹா ஃபேஸினோ, சுஸுகி ஆக்சஸ், டிவிஎஸ் ஜுப்பீட்டர், ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ், மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர்கள் ஆகியவற்றுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இதுல ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா...?!

ஸ்கூட்டர் தொடர்புடைய செய்திகள்

ஆக்டிவா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Honda Motorcycle and Scooter India is rumoured to have patented scooter called Metropolitan scooter, which is to be launched in India soon. This Metropolitan scooter is retro-styled model from Honda. This scooter will be positioned below Honda's Activa 125 scooter in India. Honda designs this scooter from scratch and it will not bear any resemblance to Activa...
Story first published: Tuesday, July 5, 2016, 13:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X