ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் டெலிவரி, ஏப்ரலில் துவங்கும்

By Ravichandran

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் டெலிவரி, இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்க உள்ளது.

விரைவில் டெலிவரி துவங்க உள்ள ஹோண்டா நவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹோண்டா நவி...

ஹோண்டா நவி...

ஹோண்டா நிறுவனம் தங்களின் நவி மோட்டோ ஸ்கூட்டரின் அறிமுகம் மூலம், இந்திய 2 சக்கர வாகன சந்தையில் ஒரு புதிய செக்மண்ட்டை உருவாக்கியுள்ளனர்.

முன்னதாக, ஹோண்டா நிறுவனம் இந்த ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரை, கடந்த மாதம் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தனர்.

புக்கிங்;

புக்கிங்;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டருக்கான புக்கிங், வழக்கம் போல் ஹோண்டா ஷோரூம்களிலும், நவீன ஆண்ட்ராய்ட் ஆப் என 2 முறைகளிலும் ஏற்கபட்டு வருகிறது.

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வந்தது. ஒரு விதத்தில், ஹோண்டா நிறுவனம் கூட இத்தகைய அபார வரவேற்பினை எதிர்பார்க்கவில்லை என கூறலாம்.

டெலிவரி;

டெலிவரி;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் டெலிவரி, வரும் ஏபரல் மாதத்தில் இருந்து துவங்கும் என தகவல்கள் வெளியாகிறது.

டெஸ்ட் டிரைவ்;

டெஸ்ட் டிரைவ்;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், அடுத்த மாதம் முதல் பல்வேறு டீலர்ஷிப்களிலும் காட்சிபடுத்தபடும். இதனை டெஸ்ட் டிரைவ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, நாளடைவில் அதற்கான வாய்ப்புகள் வழங்கபடும்.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், இந்த ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரை, இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள டபுகரா உற்பத்தி ஆலையில் தயாரிக்கபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், 109.19 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 7.83 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 8.96 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் இஞ்ஜின், ஆட்டோமேட்டிக் வி-மேட்டிக் சிஸ்டத்துடன் இணைக்கபட்டுள்ளது.

திறன்;

திறன்;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், ஒரு மணி நேரத்திற்கு 81 கிலோமீட்டர் என்ற அளவிலான உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

ஹோண்டா நவி, ஹெச்ஈடி (ஹோண்டா ஈக்கோ டெக்னாலஜி) தொழில்நுட்பம், சிறந்த மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

புதிய ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், 5 நிறங்களில் கிடைக்கிறது.

பேட்ரியார் ரெட், ஹாப்பர் ரெட், ஷாஸ்டா வைட், ஸ்பார்க்கி ஆரஞ்ச் மற்றும் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

வேரியண்ட்கள்;

வேரியண்ட்கள்;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரானது, இந்திய வாகன சந்தைகளில், தி நவி ஸ்ட்ரீட், தி நெவி அட்வென்சர் மற்றும் நவி ஆஃப்-ரோட் ஆகிய

3 வேரியண்ட்களில் விரைவில் கிடைக்க உள்ளது.

விலை;

விலை;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், 39,500 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்கிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரெண்டும் கெட்டான் டிசைனில் ஹோண்டா அறிமுகம் செய்திருக்கும் புதிய நவி!

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், ஆண்ட்ராய்ட் ஆப் மூலம் 500+ புக்கிங்கள் குவிப்பு

ஹோண்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Monday, March 14, 2016, 13:44 [IST]
English summary
Honda Navi Moto Scooter deliveries commences from April 2016. Honda has created all-new segment with its Navi. Honda Motorcycle and Scooter India launched 'Navi' during 2016 Delhi Auto Expo. Bookings for Navi are accepted through an android app and dealerships. Potential customers of Navi can book their test rides also. Honda Navi is priced at Rs. 39,500 ex-showroom (Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+