10,000 ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர்கள் விற்கபட்டு சாதனை
ஹோண்டா நிறுவனம், இது வரை சுமார் 10,000-ற்கும் மேற்பட்ட ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர்களை விற்று சாதனை படைத்துள்ளது.
ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம் வழங்கும் ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், ஃபிப்ரவரி மாதம் நடைப்பெற்ற 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், ஆக்டிவா-வின் ஃபிரேம் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கும் இது, நல்ல முறையில் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
BikeDekho என்ற நிறுவனம் வெளியிட்ட செய்தி படி, இது வரை சுமார் 10,000-ற்கும் மேற்பட்ட ஹோண்டா நவி விற்பனை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. ஹோண்டா நவி, இந்தியா முழுவதும் மொத்தம் 10 நகரங்களில் விற்பனை செய்யபட்டு வருகிறது.
ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், 39,500 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனை செய்யபட்டு வருகிறது. ஹோண்டா நிறுவனம், இந்த நவி-யின் டெலிவரியை ஏப்ரல் மாதத்தில் துவக்கியது.

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், ஹாப்பர் கிரீன், ஸ்பார்க்கி ஆரஞ்ச், ஷஸா வைட், பேட்ரியாட் ரெட் மற்றும் பிளாக் ஆகிய 5 ஈர்க்கும் வண்ணங்களில் கிடைக்கிறது.
ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், பாரம்பரியமாக ஷோரூம் சென்று வாங்கும் முறையிலும் அல்லது நவி ஆப் மூலமாகவும் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








