ஹோண்டா டிஎம்எக்ஸ் 125 - மிகவும் விலை குறைந்த பைக் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

ஹோண்டா டிஎம்எக்ஸ் 125 என்ற பைக், இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யபட உள்ளது.

விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஹோண்டா டிஎம்எக்ஸ் 125 பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

ஹோண்டா டிஎம்எக்ஸ் 125...

ஹோண்டா டிஎம்எக்ஸ் 125...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், தங்களின் படைப்பாக இந்தியாவில் புதிய 125 சிசி பைக்கை அறிமுகம் செய்யலாம்.

இது ஈர்க்கும் வகையிலான தோற்றம் கொண்டுள்ளது. சமீபத்தில் தான், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக சில ஹோண்டா டிஎம்எக்ஸ் 125 பைக்குகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.

இலக்கு வாடிக்கையாளர்கள்;

இலக்கு வாடிக்கையாளர்கள்;

ஹோண்டா டிஎம்எக்ஸ் 125 பைக், கிராமப்புற சந்தைகளை மையமாக கொண்டு அறிமுகம் செய்யபட உள்ளது. தற்போதைய நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தான் இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த செக்மெண்ட்டிலும் ஹோண்டா நிறுவனம் நுழைய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

தற்போதைய நிலையில், ஹோண்டா டிஎம்எக்ஸ் 125 சில தேர்ந்தெடுக்கபட்ட சந்தைகளில் மட்டுமே கிடைக்கிறது. இது இந்தியாவில் வெகுஜன பைக்காக தயாரிக்கப்பட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹோண்டா டிஎம்எக்ஸ் 125 பைக், 124 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹோண்டா டிஎம்எக்ஸ் 125 பைக், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. நுழைவுநிலை பைக்குகளில் இத்தகைய அமைப்பு அசாதாரனமானதாகும்.

பவர் குறித்த விஷயத்தில், இந்த பைக்கை இதன் போட்டி வாகனங்களுக்கு நிகர் திறன் கொண்ட வாகனமாக வழங்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

தற்போதைய நிலையில், ஹோண்டா நிறுவனம் 125 செக்மெண்ட்டில், சிபி ஷைன் பைக்கை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

ஹோண்டா டிஎம்எக்ஸ் 125 பைக், கிராமப்புற சந்தைகளில் அதிக அளவில் விற்பனையாகும் பஜாஜ் சிடி100 மாடலுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

ஹோண்டா டிஎம்எக்ஸ் 125 பைக், அறிமுகம் சேய்யபடும் போது, இது தான் ஹோண்டா நிறுவனம் சார்பாக விற்பனை செய்யபடும் மிகவும் விலை குறைந்த பைக்காக இருக்கும்.

இது சுமார் 30,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரையிலான விலைகளில் இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் டெலிவரி, ஏப்ரலில் துவங்கும்

ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் பைக், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

ஹோண்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Honda Motorcycle and Scooter India shall launch their all-new 125cc motorcycle in India. Honda TMX 125 could be launched as an affordable model. Honda imported couple of units of their TMX 125 motorcycle to India for R&D purposes. Honda TMX 125 shall be priced between Rs. 30,000 to Rs. 35,000, when launched in India. To know more, check here...
Story first published: Tuesday, March 29, 2016, 10:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X