கவாஸாகி இந்தியா நிறுவனத்தின் 12-வது ஷோரூம் கோயம்புத்தூரில் துவக்கம்
கவாஸாகி இந்தியா நிறுவனம், தங்களின் 12-வது ஷோரூமை கோயம்புத்தூர் மாநகரில் திறந்துள்ளனர்.
கவாஸாகி இந்தியா நிறுவனம், இந்தியாவில் தங்களின் தடத்தை விரிவுபடுத்தி கொண்டே இருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக தங்களின் 12-வது ஷோரூம் கோவையில் திறக்கபட்டுள்ளது.
இந்த கவாஸாகி கோயம்புத்தூர் ஷோரூம் திறப்பு விழாவின் போது, கவாஸாகி இந்தியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் யுடாகா யமஷிட்டா பங்குபெற்றார். இந்த ஷோரூமில், கவாஸாகி நிறுவனம் சார்பாக இந்தியாவில் வழங்கப்படும் அனைத்து மோட்டார்சைக்கிள்களும் வைக்கபட்டுள்ளது.

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் கவாஸாகி நிறுவனம் கடந்த 2 1/2 ஆண்டுகளுக்குள் 12 ஷோரூம்களை திறந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
கோவையில் அமைந்துள்ள இந்த கவாஸாகி ஷோரூம் 2,300 சதுர அடி பரப்பளவில் பரவியுள்ளது. இதில் 650 சதுர அடி சர்வீஸ் பணிகளுக்காக மட்டுமே ஒதுக்கபட்டுள்ளது. இந்த கவாஸாகி கோயம்புத்தூர் ஷோரூமானது, பல்வேறு முக்கியமான இடங்களை இணைக்கும் வகையிலும், எளிதாக அடையக்கூடிய வகையிலான மிக்கிய இடத்தில் அமைக்கபட்டுள்ளது.

கவாஸாகி கோயம்புத்தூர் ஷோரூம் ஆனது, தமிழ்நாட்டில் அமைக்கபட்டுள்ள இரண்டாவது ஷோரூம் ஆகும். கவாஸாகி இந்தியா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியா முழுவதும் இத்தகைய எராளமான புதிய ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளனர். இத்தகைய புதிய ஷோரூம்களை திறப்பதன் நோக்கமே, விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வர்க்கை இந்தியாவில் விரிவுபடுத்துவதாக தான் உள்ளது.
இந்த கவாஸாகி கோயம்புத்தூர் ஷோரூமில், நன்கு அனுபவம் பெற்ற டெக்னிஷீயன்கள், விற்பனை மற்றும் சர்வீஸ் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

கவாஸாகி இந்தியா நிறுவனத்தின், இந்த கவாஸாகி கோயம்புத்தூர் ஷோரூம் அமைந்துள்ள முகவரி;
சிகேஎஸ் டவர்ஸ்,
1/433, அவினாசி சாலை,
சின்னியம்பாளையம்,
கோயம்புத்தூர்.
CKS Towers,
1/433, Avinashi Road,
Chinniyampalayam,
Coimbatore.


Click it and Unblock the Notifications








