கவாஸாகி நின்ஜா 650 மற்றும் இஆர்-6என் மோட்டார்சைக்கிள்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது
இந்தியாவிற்கான கவாஸாகி நின்ஜா 650 மற்றும் இஆர்-6என் மோட்டார்சைக்கிள்கள் மேம்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது.
கவாஸாகி நின்ஜா 650 மற்றும் இஆர்-6என் மோட்டார்சைக்கிள்களில் செய்யப்படும் மேம்பாடுகள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மேம்பாடுகள்;
ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் கவாஸாகி நிறுவனம், இந்திய வாகன சந்தைகளுக்கான 2016 கவாஸாகி நின்ஜா 650 மற்றும் இஆர்-6என் மோட்டார்சைக்கிள் எடிஷன்களில் சில சிறிய அளவிலான மேம்பாடுகள் செய்து வழங்குகிறது.
இந்த 2 மோட்டார்சைக்கிள்கள் மாடல்களுக்கும், கூடுதல் சிறப்புமிக்க டயர்களும், புதிய பெயின்ட் ஸ்கீம்களும் வழங்கப்பட உள்ளது.

டெலிவரி;
கவாஸாகி நின்ஜா 650 மற்றும் இஆர்-6என் மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி இந்தியா முழுவதும் உடனடியாக துவங்க உள்ளது.

டயர்கள்;
இந்தியா கவாஸாகி மோட்டார்ஸ், இஆர்-6என் மோட்டார்சைக்கிளுக்கு, டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் டயர்களை பொறுத்த உள்ளனர்.
கவாஸாகி நின்ஜா 650 மோட்டார்சைக்கிளுக்கு, தொடர்ந்து டன்லப் ரோட் ஸ்மார்ட் 2 டயர்களே பொருத்தப்படும்.
இதை தவிர, இந்த 2 மோட்டார்சைக்கிள்களிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இதர மாற்றங்கள்;
கவாஸாகி நின்ஜா 650 மோட்டார்சைக்கிள், புதிய கிரீன், பிளாக் மற்றும் சில்வர் பெயின்ட் ஸ்கீம் கொண்டிருக்கும்.
இந்த மோட்டார்சைக்கிளின் டிசைனை கூட்டுவதற்கு, இங்கும் அங்கும் சில ஸ்டிக்கர்கள் சேர்க்கபட்டுள்ளது.
கவாஸாகி இஆர்-6என் மோட்டார்சைக்கிளுக்கு, கவாஸாகி கிரீன் டிட்டேயிலிங் உள்ள புதிய பிளாக் பெயின்ட் ஸ்கீம் வழங்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;
கவாஸாகி நின்ஜா 650 மற்றும் இஆர்-6என் மோட்டார்சைக்கிள்கள் இரண்டிற்குமே 649சிசி, ட்வின்-சிலிண்டர், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இந்த இஞ்ஜின், 70 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 64 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;
கவாஸாகி நின்ஜா 650 மற்றும் இஆர்-6என் மோட்டார்சைக்கிள்களின் இஞ்ஜின்கள், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஏபிஎஸ்;
துரதிர்ஷ்டவசமாக, நின்ஜா 650 மற்றும் இஆர்-6என் ஆகிய 2 மோட்டார்சைக்கிள்களிலுமே, ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை தேர்வு முறையில் கூட வழங்கவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;
புதிய கவாஸாகி ஹைப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!
கவாஸாகி வெர்சிஸ் 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது - விபரம்
கவாஸாகி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

கவாஸாகி நின்ஜா 650 மற்றும் இஆர்-6என் மோட்டார்சைக்கிள்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது - கூடுதல் படங்கள்
கவாஸாகி நின்ஜா 650 மற்றும் இஆர்-6என் மோட்டார்சைக்கிள்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது - கூடுதல் படங்கள்


Click it and Unblock the Notifications








