கவாஸாகி நின்ஜா 650 ஸ்போர்ட்ஸ் பைக்கின் விலை குறைக்கப்பட்டுள்ளது - முழு விவரம்
கவாஸாகி நிறுவனம், தங்களின் கவாஸாகி நின்ஜா 650 ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் விலைகளை வெகுவாக குறைத்துள்ளது.
கவாஸாகி நின்ஜா 650 பைக்கின் விலை குறைப்பு பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

கவாஸாகி நின்ஜா 650...
கவாஸாகி நின்ஜா 650, ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் தயாரித்து வழங்கும் ஸ்போர்ட்ஸ் பைக் ஆகும்.
இது உலக அளவில், அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் ஒன்றாக உள்ளது.

விலை குறைப்பு;
இந்திய வாகன சந்தைகளில், கவாஸாகி நின்ஜா 650 ஸ்போர்ட்ஸ் பைக்கின் விலை குறைக்கபட்டுள்ளது.
சுமார் 40,000 ரூபாய் வரை, இதன் மீது விலை குறைப்பு செய்யபட்டுள்ளது.

புதிய விலை;
இந்த விலை குறைப்புக்கு பின்னர், கவாஸாகி நின்ஜா 650 ஸ்போர்ட்ஸ் பைக் 4.97 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கப்படுகிறது.

விலை குறைப்பிற்கான காரணம்;
கவாஸாகி நின்ஜா 650 ஸ்போர்ட்ஸ் பைக்கின் மீதான இந்த விலை குறைப்பு, கவாஸாகி நிறுவனத்தின் 120-ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த தள்ளுபடி, வெறும் கவாஸாகி நின்ஜா 650 ஸ்போர்ட்ஸ் பைக்கின் 2015 மாடலுக்கு மட்டும் வழங்கப்படிருப்பதை பார்த்தால், இது ஸ்டாக் கிளியரன்ஸ் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.

விளைவு;
கவாஸாகி நின்ஜா 650 ஸ்போர்ட்ஸ் பைக், 40,000 ரூபாய் வரை விலை குறைகபட்டுள்ளதால், பல்வேறு தரப்பு மக்கள் இதை ஆர்வத்துடன் வாங்கி மகிழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமலாகும் தேதி;
கவாஸாகி நின்ஜா 650 ஸ்போர்ட்ஸ் பைக் மீதான இந்த விலை குறைப்பு, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துவிட்டது.

இஞ்ஜின்;
இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் கவாஸாகி நின்ஜா 650 ஸ்போர்ட்ஸ் பைக், 649 சிசி, ட்வின்-சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இதன் இஞ்ஜின், 71 பிஹெச்பியையும், 63.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;
கவாஸாகி நின்ஜா 650 மற்றும் இஆர்-6என் மோட்டார்சைக்கிள்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது
கவாஸாகி வெர்சிஸ் 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது - விபரம்
கவாஸாகி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

கவாஸாகி நின்ஜா 650 ஸ்போர்ட்ஸ் பைக் - கூடுதல் படங்கள்
கவாஸாகி நின்ஜா 650 ஸ்போர்ட்ஸ் பைக் - கூடுதல் படங்கள்


Click it and Unblock the Notifications








