ஸ்டைல் பழசு, தொழில்நுட்பம் புதுசு... வருகிறது புதிய கவாஸாகி மோட்டார்சைக்கிள்!

Written By:

பழமையான மோட்டார்சைக்கிள் மாடல்களை வியந்து போற்றி வரும் பாரம்பரிய மோட்டார்சைக்கிள் பிரியர்களுக்கு புதிய மோட்டார்சைக்கிள் மாடல் ஒன்றை கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.

பார்ப்பதற்கு பழைய மோட்டார்சைக்கிள் போலவும், நவீன நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்ததாகவும் இருப்பதே இந்த மோட்டார்சைக்கிளின் சிறப்பு. இந்த புதிய மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மாடல் விபரம்

மாடல் விபரம்

கவாஸாகி W800 மோட்டார்சைக்கிள்தான் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் டிசைன் சில தசாப்தங்களுக்கு முந்தைய காலக்கட்டத்தை ஒட்டியதாக இருக்கும். ஆனால், நவீன தொழில்நுட்ப அம்சங்கள் புகுத்தப்பட்டிருக்கின்றது.

டிசைன் அம்சங்கள்

டிசைன் அம்சங்கள்

சில ஆண்டுகளுக்கு முன் வந்த மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்பட்ட வட்ட வடிவ ஹெட்லைட், பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு, இருக்கை அமைப்பு, இரட்டை காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் அமைப்பு, மட்கார்டுகள், ஸ்போக்ஸ் வீல்கள், புகைப்போக்கி குழாய் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

நவீன அம்சங்கள்

நவீன அம்சங்கள்

அதேநேரத்தில், நவீன தொழில்நுட்ப விஷயங்களுடன் இந்த காலக் கட்டத்துடன் இணைந்து நிற்கிறது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக், நவீன எஞ்சினுடன் இந்த பைக் வருகிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் அமைப்பும் உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் "வி" வடிவ அமைப்புடன் இரட்டை சிலிண்டர்கள் கொண்ட சக்திவாய்ந்த 773சிசி வி-ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 60 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இந்த மோட்டார்சைக்கிள் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும். ரூ.10 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டிரையம்ஃப் போனிவில் மாடலுடன் இது போட்டிபோடும்.

ஸ்பை படம்

ஸ்பை படம்

மஹாராஷ்டிர மாநிலம், புனே நகரில் உள்ள கவாஸாகி டீலர்ஷிப்பில் இந்த மோட்டார்சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவிலேயே அதிகாரப்பூர்வமாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The W800 modern classic motorcycle by Kawasaki is most likely to launch in India by early 2017. Kawasaki is most likely to offer its W800 model as a CBU (Completely Built Unit) model.
Please Wait while comments are loading...

Latest Photos