மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர் மார்ச் 17-ல் பெங்களூருவில் அறிமுகம்
வரும் 17ந் தேதி மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர் பெங்களூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த புதிய மஹிந்திரா கஸ்ட்டோ 125சிசி ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், புதிய 124.57 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்ட், எம்-டெக் இஞ்ஜின் கொண்டுள்ளது.

திறன்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரின் எம்-டெக் இஞ்ஜின், 7,000 ஆர்பிஎம்களில் 8.5 பிஹெச்பி-யையும், 5,500 ஆர்பிஎம்களில் 10 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

வீல், டயர்கள்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், ட்யூப்பலஸ் (ட்யூப்கள் இல்லாத) 12 இஞ்ச் டயர்கள் கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன், கிரவுண்ட் க்ளியரன்ஸ்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், ஏர் ஸ்ப்ரிங்குகள் கொண்ட டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.
மேலும், இதன் கிளாஸ் ஸ்கூட்டர்களில், 165 மில்லிமீட்டர் என்ற அளவிலான சிறந்த கிரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டுள்ளது.

ஸ்பெஷல் சீட்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டருக்கு, ஹைட் அட்ஜஸ்டபுள் சீட் எனப்படும் உயரம் மாற்றிக்கொள்ள கூடிய வகையிலான இருக்கைகள் வழங்கபட்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், 4 வண்ணங்களில் கிடைக்கிறது.
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், மோனார்க் பிளாக், ரீகல் ரெட், ஆரஞ்ச் ரஷ் மற்றும் போல்ட் வைட் எனப்படும் 2 நிறங்களின் ட்யூவல் டோன் ஷேட்களில் கிடைக்கிறது.

அறிமுகம்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், பிராந்திய அளவில் மார்ச் 17-ல் அறிமுகம் செய்யபட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர் - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்
புதிய மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்
கஸ்ட்டோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








