மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர் பெங்களூருவில் விற்பனைக்கு அறிமுகம்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், பிராந்திய அளவில் பெங்களூருவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

இஞ்ஜின்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், 124.6 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் எம்-டெக் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இதன் எம்-டெக் இஞ்ஜின், 8.5 பிஹெச்பியையும், 10 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், முன்பக்கத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்குகளையும், பின் சக்கரத்தில் மோனோஷாக் ஃபோர்க்குகளும் கொண்டுள்ளது.
இதன் கிளாஸ் ஸ்கூட்டர்களில், மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், 165 மில்லிமீட்டர் என்ற அளவிலான சிறந்த கிரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டுள்ளது.

மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரின் முன் பத்திலும், பின் பக்கத்திலும் 12-இஞ்ச் அளவிலான வீல்கள் பொருத்தபட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டருக்கு, ட்யூப்லெஸ் டயர்கள் எனப்படும் ட்யூப்கள் இல்லாத டயர்கள் வழங்கபட்டுள்ளது.

ஸ்டைல்;
ஸ்டைல் ரீதியாக, மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இல்லை. இதன் பெரும்பான்மையான அம்சங்கள், இதன் இணை ஸ்கூட்டரை போலவே உள்ளது.
முக்கிய மாற்றங்கள் என்று குறிப்பிட வேண்டும் என்றால், இதன் முன் பகுதியில் கிளியர் லென்ஸ்கள் உடைய பெரிய இண்டிகேட்டர்கள் பொருத்தபட்டுள்ளது.
இதன் வெண்ட்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரகாசம் குறைவான குரோம் பூச்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் இதன் தோற்றம் மேம்பட்டுள்ளது.

கிடைக்கும் வேரியண்ட்கள்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதன் அடிப்படை வேரியண்ட் போன்ற வகையில் கஸ்ட்டோ 125 டிஎக்ஸ் என்ற வேரியண்ட்டும், டாப் எண்ட் வேரியண்ட் போன்ற வகையில் கஸ்ட்டோ விஎக்ஸ் என்ற வேரியண்ட்டும் விளங்குகிறது.

சிறப்பம்சங்கள்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், இருக்கையின் உயரத்தை மாற்றிகொள்ளக்கூடிய வகையிலான் ஹைட் அட்ஜஸ்டபிள் சீட்கள் கொண்டுள்ளது.
இதில் உள்ள ஃபைன்ட் மீ லேம்ப்ஸ் அம்சமானது, அதிக அளவிலான ஸ்கூட்டர்கள் நிறுத்தபட்டிருக்கும் பார்க்கிங் இடத்தில் இருந்து, உங்களுடைய ஸ்கூட்டரை சுலபமாக கண்டுபிடிக்க உதவுகிறது.
மேலும், இதில் உள்ள கைட் லைட் அம்சமானது, இருண்ட சாலைகளில் நாம் சிக்கலில் மாட்டி தவிக்காமல் பாதுகாக்கும் விதத்தில், சாலையில் விளக்குகளை ஒளிர செய்கிறது.
குறிப்பு ; மேற்குறிப்பிட பட்டுள்ள அனைத்து அம்சங்களும், மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரின் டாப் எண்ட் வேரியண்ட்டான விஎக்ஸ் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கபடுகிறது.

கிடைக்கும் வண்ணங்கள்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், மொத்தம் 4 வண்ணங்களில் கிடைக்கிறது.
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், ஆரஞ்ச் ரஷ், போல்ட் ஒயிட், மோனார்க் பிளாக் மற்றும் ரீகல் ரெட் என்ற 4 நிறங்களில் கிடைக்கிறது.

விற்பனைக்கு அறிமுகம்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் உள்ள அனைத்து மஹிந்திரா ஷோரூம்களிலும் இனி விற்பனைக்கு கிடைக்கும்.

போட்டி;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், ஹோண்டா ஆக்டிவா மற்றும் சுஸுகி வழங்கும் புதிய ஆக்செஸ் 125 ஆகிய ஸ்கூட்டர்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை விவரங்கள்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரின் கஸ்ட்டோ 125 டிஎக்ஸ் வேரியண்ட், 50,680 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு) விலையிலும்,
கஸ்ட்டோ 125 விஎக்ஸ் வேரியண்ட், 53,680 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு) விலையிலும் அறிமுகம் செய்யபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர் மார்ச் 17-ல் பெங்களூருவில் அறிமுகம்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
புதிய மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








