மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், 8 மாநிலங்களில் அறிமுகம்
மஹிந்திரா நிறுவனம் வழங்கும் மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், 8 மாநிலங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், இந்திய அளவில் கொஞ்ச காலத்திற்கு முன்பு தான் அறிமுகம் செய்யபட்டது. எனினும், இது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கிடைக்காத நிலை இருந்து வந்தது. தற்போது, மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர் 8 மாநிலங்களில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. முன்னதாக, இது தென் இந்தியாவில் சில பகுதிகளில் தான் கிடைத்து வந்தது. வெகு சீக்கிரத்தில், மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், மொத்தம் 4 வண்ணங்களில் கிடைக்கும். மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், ஆரஞ்ச் ரஷ், போல்ட் வைட், மோனார்க் பிளாக் மற்றும் ரீகல் ரெட் ஆகிய நிறங்களில் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம், இந்த மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரை, விரைவில் மத்திய அமேரிக்கா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர், சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்தே உருவாக்கபட்டது.

மாநிலம் - சண்டிகர்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 டிஎக்ஸ் விலை - 49,350 ரூபாய்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 விஎக்ஸ் விலை - 53,350 ரூபாய்
மாநிலம் - டெல்லி
மஹிந்திரா கஸ்ட்டோ 125 டிஎக்ஸ் விலை - 48,410 ரூபாய்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 விஎக்ஸ் விலை - 52,410 ரூபாய்
மாநிலம் - கோவா
மஹிந்திரா கஸ்ட்டோ 125 டிஎக்ஸ் விலை - 50,210 ரூபாய்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 விஎக்ஸ் விலை - 54,210 ரூபாய்
மாநிலம் - குஜராத்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 டிஎக்ஸ் விலை - 51,110 ரூபாய்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 விஎக்ஸ் விலை - 55,110 ரூபாய்
மாநிலம் - மகாராஷ்டிரா
மஹிந்திரா கஸ்ட்டோ 125 டிஎக்ஸ் விலை - 50,600 ரூபாய்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 விஎக்ஸ் விலை - 54,600 ரூபாய்

மாநிலம் - பஞ்சாப்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 டிஎக்ஸ் விலை - 49,150 ரூபாய்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 விஎக்ஸ் விலை - 53,150 ரூபாய்
மாநிலம் - ராஜஸ்தான்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 டிஎக்ஸ் விலை - 51,000 ரூபாய்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 விஎக்ஸ் விலை - 55,000 ரூபாய்
மாநிலம் - உத்திர பிரதேசம்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 டிஎக்ஸ் விலை - 50,310 ரூபாய்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 விஎக்ஸ் விலை - 54,310 ரூபாய்


Click it and Unblock the Notifications








