மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக், 15 நகரங்களில் விற்பனைக்கு அறிமுகம்
மஹிந்திரா மோஜோ பைக், இந்தியா முழுவதும் 15 நகரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனம், இதை தங்கள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் பைக்காக மையபடுத்தி கொள்கிறது.
மக்களின் மனதை கொள்ளை கொண்டு வரும் மஹிந்திரா மோஜோ குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகங்கள்;
மஹிந்திரா மோஜோ பைக், இந்தியாவில் பல்வேறு கட்டங்களில் அறிமுகம் செய்யபட்டு வருகிறது.
முன்னதாக, முதல் கட்டத்தில், மஹிந்திரா மோஜோ பைக், டெல்லி, பெங்களூரு மற்றும் பூனே ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்யபட்டது.
இதையடுத்து, தற்போது 2-ஆம் கட்டமாக 12 மாநிலங்களை சேர்ந்த 15 நகரங்களில் உள்ள 23 ஷோரூம்களில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இதில், சென்னை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களும் அடங்கும்.

இஞ்ஜின்;
மஹிந்திரா மோஜோ பைக், 300 சிசி, 4-வால்வ்கள், சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்ட், ஃப்யூவல் இஞ்ஜெக்டட் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இந்த இஞ்ஜின், 27 பிஹெச்பியையும், 30 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
மஹிந்திரா மோஜோ பைக்கின் இஞ்ஜின், 6 ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
இந்த பைக்கிற்கு இரிடியம் ஸ்பார்க் ப்ளக் வழங்கபட்டுள்ளது.

டிசைன்;
மஹிந்திரா மோஜோ பைக், இரட்டை வண்ண இருக்கைகள், தங்க நிற ஃப்ரேம்கள், இரட்டை புகைப்போக்கி குழாய்கள், 12 எல்இடி விளக்குகள் கொண்ட டெயில் லைட் க்ளஸ்டர், கருப்பு நிற அலாய் வீல்கள் போன்ற சிறப்பு கூட்டும் டிசைன் அம்சங்களை கொண்டுள்ளது.

வடிவம்;
மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக், 2,100மிமீ நீலம், 800மிமீ அகலம், 1,165.5மிமீ உயரம் கொண்டது. மேலும், இது 1,465மிமீ வீல் பேஸ் கொண்டுள்ளது.
மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் நகர்ப்புற பயணங்களுக்கும், நெடுஞ்சாலை பயணங்களுக்கும் ஏற்றதாக உள்ளது.

சிறப்பம்சங்கள்;
மஹிந்திரா மோஜோ பைக், பைரெல்லி டயாப்லோ ராஸோ II டயர்கள் வழங்கபட்டுள்ளது.
இதன் முன்புறத்தில் 320 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் சிஸ்டமும் பொருத்தபட்டுள்ளது.

சஸ்பென்ஷன்;
மஹிந்திரா மோஜோ பைக், ட்வின் ட்யூபப் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இதன் முன்புறத்தில் 143.5 மில்லிமீட்டர் நகரும் அமைப்புடைய டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் அதிக அழுத்தத்திலான கேஸ் சார்ஜ்டு
மோனோஷாக் அப்சார்பரும் வழங்கபட்டுள்ளது.

எடை;
மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக், 165 கிலோ எடை கொண்டுள்ளது.

டேங்க்;
மஹிந்திரா மோஜோ பைக், 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.
இதனால், கவலை இல்லாமல் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வசதியாக உள்ளது.

மைலேஜ்;
மஹிந்திரா மோஜோ பைக், ஒரு லிட்டருக்கு, 35 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாக கூறபட்டது.
ஆனால், சராசரியாக, ஒரு லிட்டருக்கு 25 கிலோமீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரையிலான மைலேஜை வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;
மஹிந்திரா மோஜோ பைக், கிளேசியர் ஒயிட், சார்கோல் பிளாக் மற்றும் வல்கானோ ரெட் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
இதில், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களில் ஆன பைக்குகள், தங்க நிறை பாகங்கள் மூலமாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

விலை விவரங்கள் - 1;
மஹிந்திரா மோஜோ பைக், எந்த எந்த மாநிலங்களில், என்ன என்ன விலைகளில் கிடைக்கும் என விவரமாக தெரிந்து கொள்ளலாம்.
நகரம் - விஜயவாடா
மாநிலம் - ஆந்திர பிரதேசம்
விலை - 1,69,600 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)
நகரம் - விசாகபட்டினம்
மாநிலம் - ஆந்திர பிரதேசம்
விலை - 1,69,600 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)
நகரம் - சண்டிகர்
மாநிலம் - சண்டிகர்
விலை - 1,66,600 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)

விலை விவரங்கள் - 2;
மஹிந்திரா மோஜோ பைக், எந்த எந்த மாநிலங்களில், என்ன என்ன விலைகளில் கிடைக்கும் என விவரமாக தெரிந்து கொள்ளலாம்.
நகரம் - குர்கான்
மாநிலம் - ஹரியானா
விலை - 1,63,600 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)
நகரம் - கோவா
மாநிலம் - கோவா
விலை - 1,65,500 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)
நகரம் - அஹ்மதாபாத்
மாநிலம் - குஜராத்
விலை - 1,71,800 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)

விலை விவரங்கள் - 3;
மஹிந்திரா மோஜோ பைக், எந்த எந்த மாநிலங்களில், என்ன என்ன விலைகளில் கிடைக்கும் என விவரமாக தெரிந்து கொள்ளலாம்.
நகரம் - இந்தோர்
மாநிலம் - மத்திய பிரதேசம்
விலை - 1,75,120 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)
நகரம் - நாக்பூர்
மாநிலம் - மஹாராஷ்டிரா
விலை - 1,65,500 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)
நகரம் - ஜெய்ப்பூர்
மாநிலம் - ராஜஸ்தான்
விலை - 1,69,900 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)

விலை விவரங்கள் - 4;
மஹிந்திரா மோஜோ பைக், எந்த எந்த மாநிலங்களில், என்ன என்ன விலைகளில் கிடைக்கும் என விவரமாக தெரிந்து கொள்ளலாம்.
நகரம் - சென்னை
மாநிலம் - தமிழ்நாடு
விலை - 1,71,600 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)
நகரம் - கோயம்புத்தூர்
மாநிலம் - தமிழ்நாடு
விலை - 1,71,600 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)
நகரம் - மதுரை
மாநிலம் - தமிழ்நாடு
விலை - 1,71,600 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)

விலை விவரங்கள் - 5;
மஹிந்திரா மோஜோ பைக், எந்த எந்த மாநிலங்களில், என்ன என்ன விலைகளில் கிடைக்கும் என விவரமாக தெரிந்து கொள்ளலாம்.
நகரம் - ஹைதரபாத் / ஹைதரபாத்
மாநிலம் - தெலங்கானா
விலை - 1,69,600 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)
நகரம் - லக்னோ
மாநிலம் - உத்திர பிரதேசம்
விலை - 1,69,200 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)
நகரம் - கொல்கத்தா
மாநிலம் - மேற்கு வங்காளம்
விலை - 1,71,600 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)

இதர தொடர்புடைய செய்திகள்;
மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கின் அதிகாரப்பூர்வ விபரங்கள்!
மஹிந்திரா மோஜோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் தொடர்பில் இருங்கள்
டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்
டிரைவ்ஸாப்ர்க் தமிழ் டுவிட்டர் பக்கம்


Click it and Unblock the Notifications








