மிச்செலின் டயர்களை வாங்கினால், ஸ்பெயின் சென்று மோட்டோ ஜிபி போட்டியை காண வாய்ப்பு
மிச்செலின் டயர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்பெயின் நாட்டிற்கு சென்று, அங்கு நிகழும் மோட்டோ ஜிபி போட்டியை காண வாய்ப்புகள் வழங்கபடுகிறது.
மிச்செலின் டயர் நிறுவனம், டபுள் விக்டரி என்ற ஒரு புரோகிராமை அறிவித்துள்ளனர். இந்த புரோகிராம் படி, மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான டயர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெயின் சென்று அங்கு நிகழும் மோட்டோ ஜிபி போட்டியை காண வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த டபுள் விக்டரி புரோகிராம் வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை நடைபெறும். டபுள் விக்டரி புரோகிராமில் கலந்து கொள்ள, அங்கிகரிக்கபட்ட டீலரிடம் இருந்து, வாடிக்கையாளர்கள் 2 மிச்செலின் ஸ்கூட்டர் டயர்கள் அல்லது 2 மோட்டார்சைக்கிள் டயர்களை வாங்க வேண்டும்.
இப்படி 2 மிச்செலின் ஸ்கூட்டர் டயர்கள் அல்லது 2 மோட்டார்சைக்கிள் டயர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பவர் பேங்க், பேனா, நோட்புக் அல்லது மக் வழங்கபடும். இதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு ஸ்கிராட்ச் கார்ட் ஒன்றும் கொடுக்கபடும். இந்த கார்ட்டை தேய்த்து, தங்களுக்கு வேறு என்ன பரிசுகள் கிடைத்துள்ளது என வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், வாடிக்கையாளர்கள் மிச்செலின் கஸ்டமர் கேர் நம்பரான (மிச்செலின் வாடிக்கையாளர் சேவை மையம்) - 08287322233 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அப்படி தொடர்பு கொள்ளும் போது, ஒரு எளிமையான கேள்வி கேட்கபடும். இதற்கு தகுந்த பதில் அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்பெயின் சென்று மோட்டோ ஜிபி போட்டியை காண சந்தரப்பம் அளிக்கபடுகிறது.
இதோடும் மட்டுமல்லாமல், ஸ்கூட்டர்கள் மற்றும் டேப்லட்கள் வெல்லும் வாய்ப்புகளும் வழங்கபடுகிறது.


Click it and Unblock the Notifications








