டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் - 10 டூ வீலர்கள்!

Written By:

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நெருங்கி வரும் இவ்வேளையில், அங்கு அறிமுகமாக இருக்கும் புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் குறித்த எதிர்பார்ப்பும், ஆவலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, பல புதிய டூ வீலர் மாடல்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை அலங்கரிக்க காத்திருக்கின்றன. அதில், வாடிக்கையாளரிடத்திலும், ஆட்டோமொபைல் பிரியர்கள் மத்தியிலும் அதிக ஆவலைத் தூண்டியிருக்கும் 10 புதிய இருசக்கர வாகன மாடல்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம். புதிய இருசக்கர வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு கூட இந்த பட்டியல் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்.

01. யுஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ்

01. யுஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ்

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் நிறுவனம், இந்தியாவின் லோஹியா ஆட்டோவுடன் இணைந்து இந்திய இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க உள்ளன. இந்தநிலையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக, அந்த நிறுவனத்தின் முதல் க்ரூஸர் பைக் மாடலாக யுஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

தொழில்நுட்ப விபரம்

தொழில்நுட்ப விபரம்

யுஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் மோட்டார்சைக்கிளில் 28 பிஎஸ் பவரையும், 22.76 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல வாட்டர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. ரூ.1.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

02. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி

02. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி

டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான அப்பாச்சி பிராண்டில் புதிய 200சிசி மாடல் வரும் 20ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய மாடல் இளைஞர்கள் மத்தியில் பேராவலைத் தூண்டியிருக்கிறது.

தொழில்நுட்ப விபரம்

தொழில்நுட்ப விபரம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் புதிய 200சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 25 பிஎஸ் பவரை அளிக்க வல்லதாக இருக்கும். இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இரண்டு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க் பிரேக் சிஸ்டம் இருப்பதுடன், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக கிடைக்கும். முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் இருக்கிறது. ரூ.90,000 எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

03. ஹோண்டா பிசிஎக்ஸ் 150

03. ஹோண்டா பிசிஎக்ஸ் 150

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல், புதிய ஹோண்டா பிசிஎக்ஸ் 150 ஸ்கூட்டர். 150சிசி ரகத்தில் களமிறங்கும் இந்த புதிய ஸ்கூட்டர் தோற்றம், வசதிகள், செயல்திறன் என அனைத்திலும் பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது. அத்துடன், நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்ற மாடலாக இருக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொழில்நுட்ப விபரம்

தொழில்நுட்ப விபரம்

ஹோண்டா பிசிஎக்ஸ் 150 ஸ்கூட்டரில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 153சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 13.5 பிஎஸ் பவரையும், 14 என்எம் டார்க்கையும் வழங்கும். ரூ.90,000 எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

04. ஹோண்டா சிபிஆர் 500ஆர்

04. ஹோண்டா சிபிஆர் 500ஆர்

ஹோண்டாவிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் புத்தம் புதிய மாடல். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தர இருக்கும் இந்த புதிய பைக் செயல்திறன், தோற்றம் ஆகியவற்றில் ஹோண்டா பிராண்டின் முத்திரை பதிப்பாக இருக்கும். இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த பைக்கின் தொழில்நுட்ப விபரங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

தொழில்நுட்ப விபரம்

தொழில்நுட்ப விபரம்

ஹோண்டா சிபிஆர் 500ஆர்ஆ பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 471சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47.6பிஎஸ் பவரையும், 43 என்எம் டாரக்கையும் வெளிப்படுத்தும். ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சத்திற்குள் விலை கொண்ட மாடலாக வருகிறது.

05. யமஹா எம்டி-15

05. யமஹா எம்டி-15

தாய்லாந்து நாட்டில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட, யமஹா எம்டி-15 பைக் இந்தியாவிலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பெரிய அளவில் ஆட்டோமொபைல் துறை ஊடகங்களில் செய்தி அடிபட்டு வருகிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல் காட்சிக்கு வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தற்போது விற்பனையில் உள்ள யமஹா ஆர்15 பைக்கின் நேக்கட் பாடி ஸ்டைல் கொண்ட மாடல்தான் இந்த யமஹா எம்டி-15 பைக். அதுதான் இந்தியர்கள் மத்தியிலும், ஊடகர்கள் மத்தியிலும் ஆவலைத் தூண்டியிருக்கிறது.

தொழில்நுட்ப விபரம்

தொழில்நுட்ப விபரம்

யமஹா ஆர்15 பைக்கில் இருக்கும் அதே 149சிசி எஞ்சின்தான் இந்த புதிய யமஹா எம்டி-15 பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 16.8 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரூ.1.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

 06. ஹீரோ லீப் ஹைபிரிட் ஸ்கூட்டர்

06. ஹீரோ லீப் ஹைபிரிட் ஸ்கூட்டர்

கடந்த 2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய ஹைபிரிட் ஸ்கூட்டர் தற்போது தயாரிப்பு நிலை மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது. மின் மோட்டார் மற்றும் பெட்ரோல் எஞ்சின் என இரண்டிலும் இயங்கும். சுற்றுச்சூழல் மாசு பிரச்னையில் சிக்கித் திணறும் நகர்ப்புறங்களுக்கு ஏற்ற மாடலாக நிலைநிறுத்தப்படும்.

 தொழில்நுட்ப விபரம்

தொழில்நுட்ப விபரம்

ஹீரோ லீப் ஸ்கூட்டரில் 124சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 8kW மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. 3 லிட்டர் பெட்ரோல் டேங்கும், லித்தியம் அயான் பேட்டரியும் இணைந்து ஒருமுறைக்கு 340 கிமீ பயண தூரம் என்ற அளவில் ரேஞ்ச் கொண்டதாக இருக்கும். 140 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டர் ஆண் வாடிக்கையாளர்களை குறிவைத்து களமிறக்கப்படும். ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

07. பிஎம்டபிள்யூ ஜி310ஆர்

07. பிஎம்டபிள்யூ ஜி310ஆர்

டிவிஎஸ் மோட்டார்ஸ்- பிஎம்டபிள்யூ மோட்டாராட் கூட்டணியின் முதல் பைக் மாடலாக வெளியிடப்பட்டிருக்கிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் தர இருக்கும் இந்த புதிய மாடலும் ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் மார்க்கெட்டில் பெரிய எதிர்பார்ப்பை கிளறியிருக்கிறது. ஜெர்மனியில் டிசைன் செய்யப்பட்ட இந்த புதிய பைக் மாடல் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

தொழில்நுட்ப விபரம்

தொழில்நுட்ப விபரம்

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 35 பிஎஸ் பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. இந்த பைக் 158.5 கிலோ எடை கொண்டது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டிருப்பதுடன், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர அம்சமாக இடம்பெறும். ரூ.2 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

08. பெனெல்லி 302 டொர்னேடோ

08. பெனெல்லி 302 டொர்னேடோ

டிஎஸ்கே மோட்டோவீல்ஸ்- பெனெல்லி கூட்டணி அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மாடல் பெனெல்லி 302 டொர்னேடோ. இந்த புதிய மாடல் தற்போது விற்பனையில் உள்ள டிஎன்டி 300 பைக்கின் ஃபுல் ஃபேரிங் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபேரிங் பேனல்களை தவிர்த்து, இதன் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் தோற்றத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

தொழில்நுட்ப விபரம்

தொழில்நுட்ப விபரம்

இந்த பைக்கில் இருக்கும் 300சிசி எஞ்சின் அதிகபட்சமாக 36 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. 180 கிலோ எடை கொண்ட இந்த பைக் மணிக்கு 170 கிமீ வேகம் வரை செல்லும். ரூ.3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

09. ஹீரோ எச்எக்ஸ் 250ஆர்

09. ஹீரோ எச்எக்ஸ் 250ஆர்

ஹீரோ நிறுவனத்தின் முதல் 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக வருகிறது ஹீரோ எச்எக்ஸ் 250ஆர். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடல், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எதிர்கால வர்த்தகத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கும். அமெரிக்காவின் எரிக் புயெல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தொழில்நுட்ப விபரம்

தொழில்நுட்ப விபரம்

இந்த பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட புதிய 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகப்டசமாக 31 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரூ.1.50 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

10. சுஸுகி ஜிக்ஸெர்

10. சுஸுகி ஜிக்ஸெர்

சுஸுகி இருசக்கர வாகன நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடலாக சுஸுகி ஜிக்ஸெர் மாறியிருக்கிறது. முதலில் நேக்கட் ஸ்டைலிலும், பின்னர் ஃபுல் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனையில் சாதித்து வரும் ஜிக்ஸெர் வெற்றி தந்திருக்கும் உற்சாகத்தில் தற்போது புதிய 250சிசி மாடலையும் சுஸுகி அறிமுகம் செய்ய இருக்கிறது.

 தொழில்நுட்ப விபரம்

தொழில்நுட்ப விபரம்

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250சிசி மாடலில் இருக்கும் 248சிசி எஞ்சின் அதிகபட்சமாக 25 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க்கையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். ரூ.1.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
Most Anticipated Two Wheeler Models At Auto Expo 2016.
Story first published: Thursday, January 14, 2016, 12:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark