மோட்டோ குஸ்ஸியின் வி9 பாப்பர், வி9 ரோமர் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்
மோட்டோ குஸ்ஸி நிறுவனம் வழங்கும் வி9 பாப்பர் மற்றும் வி9 ரோமர் மோட்டார்சைக்கிள்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட உள்ளது.
விரைவில் அறிமுகம் செய்யபட உள்ள இந்த 2 மோட்டார்சைக்கிள்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

வி9 பாப்பர், வி9 ரோமர்...
இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் மோட்டோ குஸ்ஸி என்ற இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம், வி9 பாப்பர் மற்றும் வி9 ரோமர் என்ற 2 மோட்டார்சைக்கிள்களையும், இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தபட்டது.
இந்த 2 மோட்டார்சைக்கிள்களும் இந்தியாவில் நவீன மற்றும் கிளாசிக் மாடல்களாக அறிமுகம் செய்யபட உள்ளது.

இஞ்ஜின்;
மோட்டோ குஸ்ஸி வழங்கும் வி9 பாப்பர் மற்றும் வி9 ரோமர் மோட்டார்சைக்கிள்களுக்கு புதிய வி9, 850 சிசி இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.
இந்த இஞ்ஜின், உச்சபட்சமாக 55 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 62 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
மோட்டோ குஸ்ஸி வழங்கும் வி9 பாப்பர் மற்றும் வி9 ரோமர் மோட்டார்சைக்கிள்களின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும்.
இந்த கியர்பாக்ஸ் மூலமாகவும், டபுள்-ஜாயிண்ட் ஷாஃப்ட் மூலமாக தான் பின் சக்கத்திற்கு பவர் கடத்தபடுகிறது.

விற்கபடும் விதம்;
ஆரம்ப கட்டத்தில், மோட்டோ குஸ்ஸி நிறுவனம் இந்த வி9 பாப்பர் மற்றும் வி9 ரோமர் மோட்டார்சைக்கிள்களை, இந்தியாவில் சிபியூ (கம்ப்ளீட்லி பில்ட் யூனிட்) எனப்படும் முழுவதும் கட்டி முடிக்கபட்ட வடிவத்தில் தான் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தியாவில் உற்பத்தி;
மோட்டோ குஸ்ஸி நிறுவனம் வழங்கும் வி9 பாப்பர் மற்றும் வி9 ரோமர் மோட்டார்சைக்கிள்கள், இந்திய வாகன சந்தைகளில் பெரும் வரவேற்ப்பை பொருத்து, இவற்றை இந்தியாவில் அசம்பிள் செய்வது அல்லது தயாரிப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.

பாதுகாப்பு;
பாதுகாப்பு பொருத்த வரை, மோட்டோ குஸ்ஸி நிறுவனம் வழங்கும் வி9 பாப்பர் மற்றும் வி9 ரோமர் ஆகிய 2 மோட்டார்சைக்கிள்களிலும், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், இம்மோபலைஸர் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் வழங்கபட்டுள்ளது.

சிறப்பு அம்சம்;
மோட்டோ குஸ்ஸி நிறுவனம் வழங்கும் வி9 பாப்பர் மற்றும் வி9 ரோமர் ஆகிய 2 மோட்டார்சைக்கிள்களிலும், தேர்வு முறையிலான மல்டிமீடியா பிளாட்ஃபார்ம் வழங்கபட்டுள்ளது.
இதை கொண்டு, ஸ்மார்ட்ஃபோன் மூலம் வயர்லெஸ் கனெக்ட்டிவிட்டி மற்றும் ஃப்யூவல் உபயோகத்திற்கான தரவுகளை (டேட்டா) பெற முடியும்.

போட்டி;
மோட்டோ குஸ்ஸி நிறுவனம் வழங்கும் வி9 பாப்பர் மற்றும் வி9 ரோமர் ஆகிய 2 மோட்டார்சைக்கிள்கலும், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் மற்றும் டிரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;
மோட்டோ குஸ்ஸி நிறுவனம் வழங்கும் வி9 பாப்பர் மற்றும் வி9 ரோமர் ஆகிய 2 மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, இவற்றின் விலைகள் 8 லட்சம் ரூபாய் முதல் 13.5 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யபடலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;
மோட்டோ குஸ்ஸி தொடர்புடைய செய்திகள்
டுகாட்டி தொடர்புடைய செய்திகள்
டிரையம்ஃப் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








