மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரின் படங்கள், தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தர இருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல், தோற்றத்தில் தற்போது விற்பனையில் இருக்கும் கஸ்ட்டோ 110 மாடலை ஒத்திருக்கிறது. ஆனால், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும் வண்ணக் கலவைகள் வேறுபடுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த ஸ்கூட்டரில் 8.6 பிஎச்பி பவரையும், 10 என்எம் டார்க்கையும் வழங்கும் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.
ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு போட்டியாக, பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் இந்த புதிய 125சிசி ஸ்கூட்டரை விரைவில் டெஸ்ட் டிரைவ் செய்ய இருக்கிறோம்.
டெஸ்ட் டிரைவில் இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள், செயல்திறன், மைலேஜ் உள்ளிட்ட முக்கிய விபரங்களை எமது வாசகர்களுடன் விரைவில் பகிர்ந்து கொள்கிறோம். அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications















