சுஸுகி நிறுவனத்தின் புதிய ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், மார்ச் 15-ஆம் தேதி அறிமுகம்

By Ravichandran

சுஸுகி நிறுவனம், தங்களின் அடுத்த தயாரிப்பான புதிய ஆக்செஸ் 125 ஸ்கூட்டரை, மார்ச் 15-ஆம் தேதி அறிமுகம் செய்கின்றனர்.

கடந்த மாதம் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், இந்த ஸ்கூட்டர் காட்சிபடுத்தபட்டது.

இந்த புதிய ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், புதிய மாடலாக விளங்குகிறது என்பதை காட்டிலும், புதிய பொலிவு கூட்டபட்டுள்ள பழைய மாடல் என்று கூறலாம். இதன் முன்பகுதிக்கு, வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள் வழங்கபட்டுள்ளதால், இது ரெட்ரோ தோற்றம் கொண்டுள்ளது. இது பழங்காலங்களை ஞாபகபடுத்தும் விதத்தில் உள்ளது. புதிய ஆக்செஸ் 125 ஸ்கூட்டருக்கு புதிய செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் பேனல் வழங்கபட்டுள்ளது.

புதிய ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் இண்டிகேட்டர்கள் மறுவடிவமைக்கபட்டுள்ளது. இது முந்தைய தலைமுறை இண்டிகேட்டர்களை காட்டிலும் பெரியதாக காட்சி அளிக்கிறது. இதன் டெய்ல்லேம்ப்களும் மறுவடிவமைக்கபட்டு ஸ்கூட்டரின் ரியர் பகுதியை மறைக்கும் வகையில் உள்ளது. மேலும், இது எல்ஈடி விளக்குகளை கொண்டுள்ளது.

new-suzuki-access-125-scooter-launch-on-15th-march

முந்தைய தலைமுறை ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் பொருத்தபட்டிருந்த அதே 125 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இஞ்ஜின் தான், இந்த புதிய ஆக்செஸ் 125 ஸ்கூட்டரிலும் பொருத்தபட்டுள்ளது. புதிய ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் உள்ள 125 சிசி இஞ்ஜின் 8.9 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 10 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

புதிய ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், 120 எம்எம் டெலஸ்கோப்பிக் ஃப்ரண்ட் ஃபோர்க்குகள் கொண்டுள்ளது. மேலும், விருப்பத்திற்கு ஏற்ப முன் பகுதியில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தி கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளது.

டிரம் பிரேக்குகள் கொண்ட புதிய ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் அடிப்படை மாடல், சுமார் 54,000 ரூபாய் விலையில் விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 11, 2016, 9:54 [IST]
English summary
Suzuki will be launching their New Access 125 Scooter on March 15th, 2016. This new Access 125 was earlier unveiled at 2016 Delhi Auto Expo. More than a brand new scooter, new Suzuki Access 125 is more of facelifted model. New Access 125 is powered by same 125cc single cylinder engine as found inprevious generation model. New Access 125 is expected to be priced at around Rs. 54,000 ex-showroom (Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+