புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் அதிகாரப்பூர்வ டீசர்

By Ravichandran

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் படங்கள், இந்தோனேஷியா வலைத்தளத்தில் டீஸ் செய்யபட்டது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் ஏராளமான தயாரிப்புகளை இந்த ஜனவரி 20-ஆம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. அதில், இந்திய சந்தைகளிலும், சர்வதேச சந்தைகளிலும், புதிய அப்பாச்சி மோட்டார்சைக்கிள்களையும் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பான 3 டீசர் படங்களை இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்தோனேஷியா வலைத்தளத்தில் வெளியிட்டு டீஸ் செய்துள்ளது.

new-tvs-apache-rtr-200-bike-teased-on-indonesian-website

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக், இந்திய சாலைகளில் மிக மும்முரமாக பரிசோதிக்கபட்டு வருகிறது. இந்த புதிய பைக், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சென்னை உற்பத்தி ஆலையில் தயாரிக்கபடும். புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் தொடர்பான கேம்பெய்ன்-களுக்கு (பிரச்சாரம்),
'அன்கவர் தி ரேஸர் இன் யூ' ('Uncover the Racer in You') என்ற புதிய டேக்லைன் உபயோகிக்கபட்டு வருகிறது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின், சமூக வலைதளங்கள் மூலமாக இந்தோனேஷிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு போட்டியும் நடத்தபடுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள், புதிய பைக்-களை செண்டுல் இண்டர்நேஷனல் சர்க்யூட்-டில் ஓட்டி மகிழும் வாய்ப்பு பெற உள்ளனர். இந்த வாய்ப்பு, புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் உலகளாவிய அறிமுகத்திற்கு பின்பு வழங்கபடும்.

new-tvs-apache-rtr-200-bike-teased-indonesian-website

விரைவில் வெளியாக இருக்கும் டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்கள் தொடர்பான எந்த கூடுதல் தகவல்களும், இந்த இந்தோனேஷிய வலைதளத்தில் வெளியிடப்படவில்லை. மொத்ததில் மூன்று படங்கள் வெளியிடபட்டன. அதில், 2 படங்கள் கருப்பு திரை கொண்டும், ஒரு படம் சிகப்பு திரையும் மூடபட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் புதிய எல்ஈடி டேடைம் ரன்னிங் லைட்கள் (டிஆர்எல்) வெளியிடபட்டுள்ளது. இந்த புதிய எல்ஈடி டிஆர்எல்-கள் முன்பை காட்டிலும் மிக ஆக்கிரோஷமாக உள்ளது. இந்த பைக்கின் அறிமுகத்திற்காகவும், புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் கூடுதல் தகவல்களுக்காகவும், ஜனவரி 20 வரை காத்திருக்க வேண்டும்.

new-tvs-apache-rtr-200-bike-teased-in-indonesian-website

More from DriveSpark

Article Published On: Tuesday, January 12, 2016, 18:04 [IST]
English summary
Images of the New TVS Apache 200 were teased on the official Indonesian Website. TVS Motors plans to launch several new products in India on January 20, 2016. New range of Apache motorcycles is one among them. The new campaign tagline for the Apache 200 Bike is fixed as 'Uncover the Racer in You'.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+