சென்னையில் பியாஜியோ நிறுவனத்தின் 3-வது மோட்டோப்ளக்ஸ் ஷோரூம் துவக்கம்

By Ravichandran

இந்தியாவில் சென்னை மாநகரில், பியாஜியோ நிறுவனத்தின் 3-வது மோட்டோப்ளக்ஸ் ஷோரூம் துவக்கபட்டுள்ளது.

இந்தியாவின் முதல் மோட்டோப்ளக்ஸ் ஷோரூம் பூனேவில் துவக்கபட்டது.

மோட்டோப்ளக்ஸ் சென்னை ஷோரூம் திறப்பு விழாவின் போது, பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சீஇஓ ஸ்டெஃபேனோ பெல்லே மற்றும் மோட்டோப்ளக்ஸ் சென்னை ஷோரூமின் எக்சிக்யூட்டிவ் டைரக்டர் சதீஷ் மேஹ்தா ஆகியோர் பங்கேற்றனர்.

சர்வதேச சந்தைகளில் உள்ள ஷோரூம்கள் போன்றே இந்தியாவில் உள்ள மோட்டோப்ளக்ஸ் ஷோரூம்களும் அமைக்கபடுகிறது. மோட்டோப்ளக்ஸ் சென்னை ஷோரூமில் அப்ரிலியா, மோட்டோ குஸ்ஸி மற்றும் வெஸ்பா மோட்டார்சைக்கிள் ரேஞ்ச் வாகனங்கள் காட்சிக்கும், விற்பனைக்கு வைக்கபட்டுள்ளது. இந்த மோட்டோப்ளக்ஸ் ஷோரூம்களில், பியாஜியோ நிறுவனத்தின் லைஃப்ஸ்டைல் கலெக்‌ஷன்களும் கிடைக்கும்.

piaggio-motoplex-chennai-first-showroom-third-in-india-opened-recently

மோட்டோப்ளக்ஸ் சென்னை ஷோரூம், அஷோக் நகர் பகுதியின் 4-வது அவென்யூ-வில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூம், சுமார் 4,061 சதுர அடி என்ற பரப்பளவில் பரவி உள்ளது. இந்த மோட்டோப்ளக்ஸ் சென்னை ஷோரூம், 3எஸ் மையமாக செயல்படுகிறது. சென்னையில் உள்ள இந்த மோட்டோப்ளக்ஸ் ஷோரூம், 2 சக்கர வாகன ஆர்வலர்களுக்கு மிக முக்கியமான மையமாக விளங்கும்.

தற்போதைய நிலையில், மோட்டோப்ளக்ஸ் ஷோரூம்கள், ஹைதரபாத், பூனே மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் உள்ளது. சென்னையில் மோட்டோப்ளக்ஸ் ஷோரூமின் தோற்றம் மற்றும் டிசைன், ஷாங்காய், மிலன், சிங்கப்பூர் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள மோட்டோப்ளக்ஸ் ஷோரூமை போலவே இருக்கிறது.

piaggio-motoplex-chennai-first-showroom-third-in-india-opened-now

இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியா முழுவதும் பரவலாக மேலும் பல்வேறு மோட்டோப்ளக்ஸ் ஷோரூம்கள் திறக்கபட உள்ளது. பிரிமியம் ஷோரூம்களாக இயங்கும் மோட்டோப்ளக்ஸ் ஷோரூம்களில், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் மூன்று முக்கிய பிராண்ட்களான மோட்டோ குஸ்ஸி மற்றும் வெஸ்பா மோட்டார்சைக்கிள் ரேஞ்ச் வாகனங்கள் விற்கபடுகிறது.

இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் பியாஜியோ நிறுவனம், இந்த ஆண்டு மத்தியில், பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளனர். விரைவில் வெளியாக உள்ள அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர் இந்த மோட்டோப்ளக்ஸ் ஷோரூம்கள் மூலம் விற்கபட உள்ளது. இதனை கருத்தில் கொண்டும், பியாஜியோ நிறுவனம தங்களின் ஷோரூம்களை வேகமாக விரிவாக்கம் செய்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 25, 2016, 10:43 [IST]
English summary
Piaggio India has opened their 3-rd Motoplex Showroom In Chennai. This is their Third showroom in India. Motoplex Chennai outlet is spread across 4,061 sq. ft. and is located in 4th Avenue, Ashok Nagar in Chennai. On display in Motoplex outlets would be premium range from Aprilia, Moto Guzzi, and Vespa. To know more about Motoplex Chennai, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+