தமிழகத்தில், முன்னணி டூ வீலர்களின் இன்றைய சந்தை மதிப்பு நிலவரம்!

By Saravana

பயன்படுத்தப்பட்ட கார்கள் போன்றே, பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான சந்தையும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. யூஸ்டு கார் மார்க்கெட்டில் தயாரிப்பு நிலவரங்களே நேரடியாக இறங்கியிருப்பதால், ஓரளவு நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. ஆனால், இருசக்கர வாகன மார்க்கெட் மிகப்பெரிய சந்தையை கொண்டிருந்தாலும், நம்பகத்தன்மை குறைவாகவே காணப்படுகிறது.

இருப்பினும், விரும்பும் இருசக்கர வாகனத்தை மிக குறைவான பட்ஜெட்டில் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களே ஒரே சாய்ஸ். இந்தநிலையில், யூஸ்டு மார்க்கெட்டில் இருக்கும் சில பிரபலமான பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் தமிழக சந்தை மதிப்பு நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் வழங்கியிருக்கிறோம். புதிய பைக் வாங்குவதற்காக, தங்களது இருசக்கர வாகனத்தை விற்பனை செய்ய முனைவோருக்கும், பழைய இருசக்கர வாகனத்தை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளோருக்கும் இது பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.

முக்கியக் குறிப்பு

முக்கியக் குறிப்பு

வண்டியின் கன்டிஷன், ஓடிய தூரம், பராமரிப்பு போன்றவற்றின் அடிப்படையில், இருசக்கர வாகன மாடல்களின் மதிப்பு கூடுதல், குறைவு இருக்கும். இந்த செய்தித் தொகுப்பில் மார்க்கெட்டில் குறிப்பிட்ட இருசக்கர வாகனத்திற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலை மதிப்பை வழங்கியிருக்கிறோம். இதன்மூலம், உங்களது வாகனத்தை விற்கும்போதோ அல்லது பயன்படுத்தப்பட்ட வாகனத்தை வாங்கும்போதும் அதன் உண்மையான மதிப்பை ஓரளவு எடை போட்டுவிட முடியும். 2011ம் ஆண்டு வாங்கப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான குறைந்தபட்ச, அதிகபட்ச விலை மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

2011 பஜாஜ் பிளாட்டினா

2011 பஜாஜ் பிளாட்டினா

குறைந்தபட்ச விலை: ரூ.20,500

அதிகபட்ச விலை: ரூ.24,500

அதிக மைலேஜ், குறைந்த பராமரிப்பு கொண்ட பஜாஜ் பிளாட்டினாவுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, ஊரக மார்க்கெட்டில் பஜாஜ் பிளாட்டினாவுக்கு மவுசு அதிகம். வண்டியின் கன்டிஷன் சிறப்பாக இருந்தால், அதிகபட்சமாக ரூ.24,000 வரை கொடுத்து வாங்கலாம் என்று இந்த சந்தையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

2011 பஜாஜ் பல்சர் டிடிஎஸ்ஐ

2011 பஜாஜ் பல்சர் டிடிஎஸ்ஐ

குறைந்தபட் விலை: ரூ.32,500

அதிகபட்ச விலை: ரூ.38,500

150சிசி மார்க்கெட்டில் கண்ணை மூடிக்கொண்டு வாங்கக்கூடிய பைக் பஜாஜ் பல்சர். 5 ஆண்டுகள் ஓடியிருந்தாலும், பெர்ஃபார்மென்ஸ், இருக்கை அமைப்பு, தோற்றம் என அனைத்திலும் சிறப்பாக இருக்கும். அதேநேரத்தில், இதில் இருக்கும் பிரச்னைகளை உங்களுக்கு அறிமுகமான மெக்கானிக்கை வைத்து நன்கு ஆராய்ந்து வாங்குவதே சாலச்சிறந்தது.

2011 பஜாஜ் டிஸ்கவர் 100 டிடிஎஸ்ஐ

2011 பஜாஜ் டிஸ்கவர் 100 டிடிஎஸ்ஐ

குறைந்தபட்ச விலை: ரூ.24,000

அதிகபட்ச விலை: ரூ.28,500

குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் பைக் மாடல்களில் முன்னிலை வகிக்கிறது பஜாஜ் டிஸ்கவர் 100டிடிஎஸ்ஐ. டிஸ்கவர் பைக் மாடலுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல அறிமுகமும் இருப்பதும் முக்கியம். வண்டியின் கண்டிஷனை பொறுத்து மேற்கண்ட விலையில், வாங்க, விற்பது குறிதது முடிவு செய்யலாம்.

2011 ஹீரோ டீலக்ஸ்

2011 ஹீரோ டீலக்ஸ்

குறைந்தபட்ச விலை: ரூ.23,500

அதிகபட்ச விலை: ரூ.27,500

குறைந்த விலையில் அதிர்வுகள் குறைவான, நம்பகமான எஞ்சின் மற்றும் சிறப்பான மைலேஜ் தரும் பைக் மாடல். தோற்றத்திலும் கவரும் என்பதோடு, பராமரிப்பும் குறைவானது.

 2011 ஹீரோ ஸ்பிளென்டர் புரோ

2011 ஹீரோ ஸ்பிளென்டர் புரோ

குறைந்தபட்ச விலை: ரூ.27,000

அதிகபட்ச விலை: ரூ.31,500

ஹீரோ நிறுவனத்தின் மிக அதிகம் விற்பனையாகும் பைக் மாடல் என்பதோடு, சிறப்பான மறுவிற்பனை மதிப்பு கொண்டது. அதிக மைலேஜ், ஸ்மூத்தான எஞ்சின், தோற்றம் என அனைத்திலும் தன்னிறைவான மாடல். பட்ஜெட்டும் கூட பலருக்கும் தோதான மாடலாக வலம் வருகிறது.

 2011 ஹீரோ பேஷன் புரோ

2011 ஹீரோ பேஷன் புரோ

குறைந்தபட்ச விலை: ரூ.27,500

அதிகபட்ச விலை: ரூ.32,500

டிசைன், மைலேஜில் தன்னிறைவான பைக். இதுவும் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக விளங்குகிறது. சிறந்த பராமரிப்பில் உள்ள பைக்குகளை தேர்வு செய்து வாங்குவது அவசியம். தோற்றத்தை வைத்து எடை போட்டு வாங்கிவிடாதீர்.

2011 டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்

2011 டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்

குறைந்தபட்ச விலை: ரூ.26,000

அதிகபட்ச விலை:31,000

ஹோண்டா ஆக்டிவாவுக்கு போட்டியாக டிவிஎஸ் நிறுவனம் களமிறக்கிய மாடல். ஸ்கூட்டியை வைத்து பெண் வாடிக்கையாளர்களை வளைத்து வைத்திருக்கும் டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்த இருபாலருக்குமான ஸ்கூட்டர். போட்டியாளர்களை ஒப்பிடுகையில், தோற்றம் கவர்ச்சியாக இல்லை என்ற குறைதான். இலகுவான கையாளுமை, மைலேஜ் என்று சிறப்பான மாடல்.

 2011 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி 110

2011 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி 110

குறைந்தபட்ச விலை: ரூ.19,500

அதிகபட்ச விலை: ரூ.23,500

ஊரக மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலை பெற்ற மாடல். ஆனால், ஹீரோ பைக்குகளை ஒப்பிடும்போது, டிவிஎஸ் பைக்குகளின் மறு விற்பனை மதிப்பு மிக குறைவாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேநேரத்தில், மிக மிக குறைவான பட்ஜெட்டில் இந்த பைக்கை வாங்க முடியும். மிக மோசமான சாலைகளை கூட எளிதாக எதிர்கொள்ளும் வடிவமைப்பு பெற்றது.

2011 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160

2011 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160

குறைந்தபட்ச விலை: 35,000

அதிகபட்ச விலை: ரூ.41,500

டிவிஎஸ் நிறுவனத்தின் பிராண்டு மதிப்புக்கு உறுதுணையாக விளங்கும் மாடல். விற்பனையிலும் சிறப்பான எண்ணிக்கையை வழங்கி வருகிறது. தோற்றம், செயல்திறன், அடக்கமான வடிவம் போன்றவை இந்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தந்துள்ளது. வண்டியின் கன்டிஷனை பார்த்து மிக தோதான பட்ஜெட்டில் வாங்க முடியும்.

2011 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

2011 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

குறைந்தபட்ச விலை: ரூ.14,000

அதிகபட்ச விலை: ரூ.16,500

எளிமையான போக்குவரத்து சாதனம் என்பதோடு, பொருட்களை அதிக அளவில் எடுத்துச் செல்வதற்கான வசதியுடன் குறைவான விலையில் கிடைக்கும் இருசக்கர வாகனம். வியாபாரிகளுக்கு ஏதுவாக இருக்கும்.

 2011 யமஹா ஆர்15

2011 யமஹா ஆர்15

குறைந்தபட்ச விலை: ரூ.50,500

அதிகபட்ச விலை: ரூ.59,500

டிசைன், செயல்திறனில் இளைஞர்களை வசியம் செய்த மாடல். ஆர்15 வைத்திருந்தாலே, அது ஒரு கெத்து. எனவே, இந்த பைக்கிற்கான வரவேற்பு தொடர்ந்து இருந்து வருகிறது.

2011 ஹோண்டா ஷைன்

2011 ஹோண்டா ஷைன்

குறைந்தபட்ச விலை: ரூ.30,500

அதிகபட்ச விலை: ரூ.35,500

125சிசி மார்க்கெட்டில் விற்பனையில் நம்பர்- 1 மாடல். டிசைன், நம்பகமான எஞ்சின், செயல்திறன், மைலேஜ் என அனைத்திலும் சிறப்பான மாடல். இருக்கை அமைப்பும் மிகச்சிறப்பாக இருப்பதால், ஓட்டும்போது அதிக சோர்வு தராது.

2011 ஹோண்டா ஆக்டிவா

2011 ஹோண்டா ஆக்டிவா

குறைந்தபட்ச விலை: ரூ.27,500

அதிகபட்ச விலை: ரூ.32,500

ஹோண்டாவின் தரத்தை பரைசாற்றும் மாடல். தரம், நம்பகமான எஞ்சின், செயல்திறன், மறு விற்பனை மதிப்பு என அனைத்திலும் சிறப்பான மாடல்.

2011 சுஸுகி ஜிஎஸ்150ஆர்

2011 சுஸுகி ஜிஎஸ்150ஆர்

குறைந்தபட்ச விலை: ரூ.36,500

அதிகபட்ச விலை: ரூ.42,500

150சிசி பைக்கை விரும்புபவர்களுக்கு குறைந்த பட்ஜெட்டில் வாங்குவதற்கான ஓர் நல்ல மாடல். சுஸுகி ஜிக்ஸெர் வெற்றி பெற்ற அளவுக்கு இந்த மாடல் வெற்றிபெறாவிட்டாலும், குறைவான விலையல் யூஸ்டு மார்க்கெட்டில் கிடைக்கிறது.

2011 சுஸுகி அக்ஸெஸ்

2011 சுஸுகி அக்ஸெஸ்

குறைந்தபட்ச விலை: ரூ.26,500

அதிகபட்ச விலை: ரூ.30,500

தோற்றம், செயல்திறன் போன்றவற்றில் சிறப்பான மாடல். மைலேஜ், மறுவிற்பனை மதிப்பில் சற்று குறைவாக இருக்கிறது.

கவனம்

கவனம்

பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கும்போது மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது. வண்டி கன்டிஷனை பார்க்கும் அதே அளவுக்கு, வண்டியின் ஆவணங்களையும், குற்ற வழக்குகள் உள்ளதா என்று ஆய்வு செய்து வாங்கவும். பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை கடனில் வாங்குவதை அறவே தவிர்க்கவும்.

More from DriveSpark

Article Published On: Monday, January 18, 2016, 12:01 [IST]
English summary
Some Popular Used Two Wheelers Current Resale Value In Tamil Nadu.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+