புல்லட் மோட்டார்சைக்கிள்கள் வாடகைக்கு... மணிக்கு ரூ.40 மட்டுமே!

Written By:

கார்களை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டுவதற்கான சேவையை பல நிறுவனங்கள் இன்று வழங்கி வருகின்றன. இதே பாணியில் தற்போது புல்லட் மோட்டார்சைக்கிள்களை மணி வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டுவதற்கான வாய்ப்பு பெங்களூர் வாசிகளுக்கு கிடைத்திருக்கிறது.

ஆம், ராயல் பிரதர்ஸ் என்ற நிறுவனம் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட கர்நாடகத்தின் முக்கிய நகரங்களில் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரை மணி வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டுவதற்கான சேவையை துவங்கியிருககிறது.

மாடல்கள்

மாடல்கள்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு உள்ளிட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களும், ஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டரும் ராயல் பிரதர்ஸ் நிறுவனத்தில் வாடகைக்கு கிடைக்கிறது.

 குறைந்தபட்ச கட்டணம்

குறைந்தபட்ச கட்டணம்

ஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டருக்கு குறைந்தபட்சமாக மணிக்கு 10 ரூபாயும், புல்லட் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு மணிக்கு 40 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் இந்த கட்டணம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வண்டியில் எரிபொருள் முழுவதுமாக நிரப்பித் தரப்படும். கூடுதலாக செல்வதற்கான எரிபொருளை வாடிக்கையாளரே நிரப்பிக் கொள்ளலாம். அதனை தவிர்த்து வாடகை வசூலிக்கப்படும். ஹெல்மெட்டிற்கு நாள் ஒன்றிற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.

 புல்லட்டுகளுக்கான கட்டண விபரம்

புல்லட்டுகளுக்கான கட்டண விபரம்

புல்லட் மோட்டார்சைக்கிள்களுக்கு மணிக்கு 40 ரூபாயும், இந்த ஒரு மணிநேரத்திற்கு 10 கிமீ தூரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு மேல் ஓட்டினால் ஒவ்வொரு கிமீ.,க்கும் 4 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். அதேபோன்று, கூடுதலாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 200 ரூபாய் கட்டணம்.

ஆக்டிவா கட்டண விபரம்

ஆக்டிவா கட்டண விபரம்

குறைந்தபட்சமாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு ஒரு மணிக்கு 6 கிமீ வரை இலவச எரிபொருளுடன் வழங்கப்படுகிறது. அதற்கு மேலான கிலோமீட்டருக்கு ரூ.2 வீதம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்திற்கும் 200 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

 ஆன்லைனில் முன்பதிவு

ஆன்லைனில் முன்பதிவு

மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரை வாடகைக்கு எடுக்க விரும்புவோர், ஆன்லைன் மூலமாக குறிப்பிட்ட நாள், நேரத்திற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், முன்பதிவு செய்யும்போது கேட்கப்படும் ஓட்டுனர் உரிமத்தின் நகல் உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும். 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வாடகைக்கு எடுக்க முடியும்.

செக்யூரிட்டி டெபாசிட்

செக்யூரிட்டி டெபாசிட்

வாகனத்தை வாடகைக்கு எடுப்பவர்கள் வாடகை தொகையுடன், ரூ.2,000-ஐ முன்பணமாக சேர்த்து செலுத்த வேண்டும். பயணம் முடிந்து வண்டியை திரும்ப ஒப்படைக்கும்போது, இந்த முன்பணம் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் 5 முதல் 7 வேலை நாட்களுக்குள் திரும்ப வரவு வைக்கப்பட்டு விடும்.

அவசர உதவி

அவசர உதவி

நடுவழியில் மோட்டார்சைக்கிளில் பழுது ஏற்படும்பட்சத்தில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அவசர உதவி மையத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் உடனடி உதவியை பெறும் வசதியும் உள்ளது.

ஆர்டிஓ அனுமதி

ஆர்டிஓ அனுமதி

ராயல் பிரதர்ஸ் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் உரிய அனுமதியும், பதிவும் செய்யப்பட்டிருக்கின்றன.

 வேக வரம்பு

வேக வரம்பு

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் மணிக்கு 90 கிமீ வேகத்தை தாண்டினாலும், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் 70 கிமீ வேகத்தை தாண்டினாலும், விதிமுறையை மீறியதற்காக முன்பணத்திலிருந்து ரூ.500 பிடித்தம் செய்யப்படும்.

தோதுவான இடங்கள்....

தோதுவான இடங்கள்....

பெங்களூரில் பல முக்கிய பகுதிகளிலும் பிக்கப்/ டிராப் பாயிண்ட்டுகள் உள்ளன. வாடிக்கையாளருக்கு அருகாமையிலுள்ள இடத்தை தேர்வு செய்து வாகனத்தை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம்.

இதர நகரங்களில்...

இதர நகரங்களில்...

பெங்களூர் தவிர்த்து, மைசூர், உடுப்பி, மங்களூர் மற்றும் கோவா ஆகிய நகரங்களிலும் ராயல் பிரதர்ஸ் நிறுவனம் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுகிறது.

முழு விபரங்களுக்கு....

முழு விபரங்களுக்கு....

முழு விபரங்களுக்கு ராயல் பிரதர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

ராயல் பிரதர்ஸ் இணையதளம் செல்ல க்ளிக் செய்க.

 
English summary
Royal Brothers Bike Rental Service In Bangalore. Complete details in Tamil.
Story first published: Friday, February 26, 2016, 17:02 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark