ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், பிராந்திய அளவில் டெல்லியில் அறிமுகம்
ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், பிராந்திய அளவில் டெல்லியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன்...
ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் தான், இந்நிறுவனம் சார்பாக அறிமுகம் செய்யபட்டுள்ள முழுமையான சாகச பைக் ஆகும்.
இது பெரிதும் எதிர்பார்க்கபட்ட மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக விளங்கியது.

அறிமுகங்கள்;
ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் இந்திய அறிமுகம், மார்ச் 16-ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது.
பிராந்திய அளவில், இது டெல்லியில் தற்போது தான் முறைப்படி அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இஞ்ஜின்;
ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், 411 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இதன் இஞ்ஜின், 24.50 பிஹெச்பியையும், 32 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;
ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், எடாகூடமான நிலப்பரப்புகளிலும், ஆஃப் ரோட் உபயோகம் உள்ளிட்ட பிரத்யேகமான தேவைகளுக்காக வடிவமைக்கபட்ட வாகனம் ஆகும்.
நெடுந்தூர பயணங்களின் போது, இதன் ஆயில் மாற்றத்திற்கான சர்வீஸ் இடைவெளி, 10,000 கிலோமீட்டர் என்ற வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;
ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், 2 வண்ணங்களில் மட்டுமே கிடைக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிள், கிரானைட் அல்லது ஸ்னோ பெயிண்ட் ஸ்கீம்களில் மட்டுமே கிடைக்கிறது.

புக்கிங்;
டெல்லியில், ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள்களின் புக்கிங், அங்கீகரிக்கப்பட்ட ராயல் என்பீல்டு ஷோரூம்களில் 30-ஆம் தேதி முதல் மேற்கொள்ளபட்டு வருகிறது.

விலை விவரங்கள் - 1;
தற்போதைய நிலையில், ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், தேர்ந்தெடுக்கபட்ட நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யபட்டு வருகிறது.
எந்த எந்த நகரங்களில், என்ன விலைகளில் விற்பனை செய்யபடுகிறது என விவரமாக தெரிந்து கொள்வோம்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் - பூனே - ஆன்-ரோட் விலை - 1.70 லட்சம் ரூபாய்
ராயல் என்பீல்டு ஹிமாலயன் - டெல்லி - ஆன்-ரோட் விலை - 1.74 லட்சம் ரூபாய்
ராயல் என்பீல்டு ஹிமாலயன் - சென்னை - ஆன்-ரோட் விலை - 1.76 லட்சம் ரூபாய்

விலை விவரங்கள் - 2;
எந்த எந்த நகரங்களில், என்ன விலைகளில் விற்பனை செய்யபடுகிறது என விவரமாக தெரிந்து கொள்வோம்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் - ஹைதரபாத் - ஆன்-ரோட் விலை - 1.77 லட்சம் ரூபாய்
ராயல் என்பீல்டு ஹிமாலயன் - மும்பை - ஆன்-ரோட் விலை - 1.79 லட்சம் ரூபாய்
ராயல் என்பீல்டு ஹிமாலயன் - கொல்கத்தா - ஆன்-ரோட் விலை - 1.82 லட்சம் ரூபாய்
ராயல் என்பீல்டு ஹிமாலயன் - பெங்களூரு - ஆன்-ரோட் விலை - 1.84 லட்சம் ரூபாய்

பிற பகுதிகளில் அறிமுகம்;
ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், பிற பகுதிகளில் படிப்படியாக தான் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ் செய்து கொள்ள உதவும் ஆக்சஸரீஸ்கள்
ராயல் என்பீல்டு தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








